நாட்டில் இடம்பெறும் கைதுகள் தொடர்பில் ஐ.தே.க வெளியிடும் அதிர்ச்சித் தகவல்
இலங்கையில் கைது செய்யப்படுபவர்களில் 98 வீதமானவர்கள் குற்றமற்றவர்கள் என ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் வஜிர அபேகுணவர்தன ஊடகங்களிடம் இந்த கருத்தை தெரிவித்துள்ளார்.
இலங்கையில் கைது செய்யப்படுபவர்களில் 98 வீதமானவர்கள் குற்றமற்றவர்கள் என பின்னர் விடுதலை செய்யப்படுகிறார்கள் என அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் கைது செய்யப்படுபவர்களில் பெரும்பாலானவர்கள் குற்றமற்றவர்கள் என விடுதலை செய்யப்படுவது ஓர் பாரதூரமான விடயம் என அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் ஐக்கிய நாடுகள் அமைப்பும் இலங்கையின் சட்ட சமூகமும் கவனம் செலுத்த வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
உதாரணமாக ஜப்பானில் 100 பேர் கைது செய்யப்படுபவர்களில் 98 பேர் குற்றவாளிகளாகின்றனர் எனவும் இந்தியாவில் 100 பேர் கைது செய்யப்படுபட்டால் 57 பேர் குற்றவாளிகள் ஆகின்றார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் விசாரணைகள் பூர்த்தி செய்யப்படாது கைதுகள் மேற்கொள்ளப்படுவதாக வஜிர அபேகுணவர்தன குற்றம் சுமத்தியுள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவை சிறையில் பார்வையிட்டு திரும்பிய பின்னர் ஊடகங்களிடம் அவர் இந்த கருத்தை வெளியிட்டுள்ளார்.
வீராணம் திட்டத்திற்கு லஞ்சம் கேட்ட கலைஞரின் மருமகன் - சட்டமன்றத்தில் பேசிய முதல்வர் விஜய் News Lankasri
புதிய வீடு கட்டியுள்ள பிரபல நடன இயக்குனர் ஸ்ரீதர் மாஸ்டர்... குடும்பத்துடன் எடுத்த போட்டோ Cineulagam