மகிந்தவின் மகன்களுக்கு வஜிர விடுத்த விசேட அழைப்பு
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரான முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன, இலங்கை பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச மற்றும் அவரது சகோதரர் யோஷித ராஜபக்ச ஆகியோருக்கு அண்மையில் அழைப்பு விடுத்துள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர் பதவியைப் பெறுவதற்காக இந்த அழைப்பு விடுக்கப்படவில்லை எனவும் ஐக்கிய தேசியக் கட்சியின் 79ஆவது ஆண்டு விழாவில் கலந்து கொள்ளவே இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது எனவும் தென்னிலங்கை ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
அண்மையில் நாமல், யோஷித மற்றும் வஜிர மூவரும் கலந்து கொண்ட திருமண விழாவில் இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
அழைப்புக் கடிதம்
இதன்போது, வஜிர அபேவர்தன, நாமல் ராஜபக்சவிடம் அழைப்புக் கடிதம் தன்னிடம் இருப்பதாகக் கூறியுள்ளார்.
அதை நினைவில் கொண்டு, இந்த ஐக்கிய தேசியக் கட்சியின் ஆண்டு விழாவில் கலந்து கொள்ள வேண்டும் என நான் நினைக்கின்றேன். இருப்பினும், அந்த நேரத்தில், இந்த விழாவில் கலந்து கொள்ள முடியாது என்று நாமல் ராஜபக்ச கூறியுள்ளார்.
தான் வெளிநாடு செல்ல இருப்பதால் இந்த நிகழ்வில் கலந்து கொள்ள முடியாது எனவும் எதிர்காலத்தில் வேறு ஏதாவது முயற்சிப்போம் எனவும் நாமல் தெரிவித்துள்ளார்.
அதன் பிறகு, யோஷிதவை வஜிர அழைத்த நிலையில் அவரும் தன்னால் முடியாது என குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையிலேயே, ஐக்கிய தேசியக் கட்சியின் 79ஆவது ஆண்டு விழாவில் நாமல் ராஜபக்சவோ யோஷிதவோ கலந்து கொள்ளவில்லை, அக்கட்சியின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் கலந்து கொண்டார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



