கோவிட் தொற்றால் மரணிப்போரின் குடும்பங்களுக்கு 25 இலட்சம் ரூபா நட்டஈடு வழங்க வேண்டும் என கோரிக்கை
கோவிட் - 19 பெருந்தொற்றினால் உயிரிழப்போரின் குடும்பங்களுக்கு தலா 25 இலட்சம் ரூபா நட்டஈடு வழங்கப்பட வேண்டுமென ஐக்கிய தேசியக் கட்சியின தவிசாளர் வஜிர அபேகுணவர்தன தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,
பெருந்தொற்றுக்கு மத்தியிலும் முன்னரங்க களப் பணியில் ஈடுபட்டு வரும் அரசாங்க ஊழியர்களுக்கு 25000 ரூபா மேலதிக கொடுப்பனவுடன் 50 இலட்சம் ரூபா பெறுமதியான காப்புறுதி ஏற்பாடுகளும் செய்யப்பட வேண்டும்.
ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் இந்தக் கோரிக்கையை முன்வைப்பதாக அவர் தெரிவித்துள்ளர்.
கோவிட் பெருந்தொற்று நிலைமைகளில் அரசாங்கம் உரிய முறையில் செயற்படத் தவறியதனால் மக்கள் பெரும் பிரச்சினைகளை எதிர்நோக்க நேரிட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
அரசாங்கம் கோவிட் தொடர்பில் உரிய கவனம் செலுத்தவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.