மகிந்தவுக்கு உயிராபத்து.. பாதுகாப்பு கோரும் ரணில் தரப்பு
ஒரு சில குழுக்கள் ஆயுதங்களைக் கொண்டு மகிந்த ராஜபக்சவை கொல்லக் கூடிய அச்சுறுத்தல் உள்ளது. எனவே, இலங்கை அரசால் அவர் பாதுகாக்கப்பட வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன தெரிவித்தார்.
இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறுகையில், "மறைந்த முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர். ஜயவர்த்தனவால் கொண்டுவரப்பட்ட 1978ஆம் ஆண்டு அரசமைப்பு அமெரிக்க மற்றும் பிரான்ஸ் அரசமைப்புகளை அடிப்படையாகக் கொண்டதாகும்.
அதற்கமைய அமெரிக்காவில் ஜனாதிபதி ஒருவர் பதவிக் காலத்தின் பின்னர் முன்னாள் ஜனாதிபதி என அழைக்கப்படுவதில்லை. மாறாக அவர் உயிர் வாழும் வரை பதவி வகித்தல் மற்றும் அதன் பின்னரான நிலைமை ஆகிய இரண்டு மாத்திரமே காணப்படுகின்றது.
முக்கியமான முடிவுகள்
எமது நாட்டின் அரசமைப்புக்கமைய ஜனாதிபதியின் பதவிக் காலத்துக்குப் பிறகு அவர்களின் வாழ்வு பாதுகாக்கப்பட வேண்டும். ஏனெனில் அவர்கள் நாட்டுக்காக முக்கியமான முடிவுகளை எடுத்துள்ளனர்.
உதாரணமாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச யுத்தத்தை நிறைவு செய்வதற்கு இறுதியாக தலைமை வகித்த அரச தலைவர் என்ற ரீதியில் உலகின் சில நாடுகளுக்குச் சென்று அவரால் தனித்து நாடு திரும்ப முடியாது.
ஒரு சில குழுக்களால் கைகளிலுள்ள ஆயுதங்களைக் கொண்டு கொல்லப்படக் கூடிய அச்சுறுத்தலுடைய தலைவர் மகிந்த ராஜபக்ச ஆவார். எனவே, இலங்கை அரசால் மகிந்த ராஜபக்ச பாதுகாக்கப்பட வேண்டும்.
சுதந்திரத்துக்குப் பின்னரான இலங்கை அரசியல் வரலாற்றில் சகல ஆளும், எதிர்க்கட்சி தலைவர்களும் அகால மரணமடைந்தவர்களாக அல்லது கொலை முயற்சியில் இருந்து தப்பியவர்களாகவே உள்ளனர்.
அரசியல் கலவரம்
எனவே, இந்தச் செயல்கள் மூலம் சமூகத்தில் வெறுப்பையும் விரோதத்தையும் உருவாக்குவது இலங்கைக்கு நன்மை அளிக்காது. ஜனநாயக நாடுகள் என்றும் முன்னோக்கியே பயணித்திருக்கின்றன.
நேபாளம் போன்ற நாடுகள் இந்த வரலாறுகளைக் கற்றால் தற்போதைய நிலைமைக்கு உகந்ததாக இருக்கும். இலங்கையில் அரசியல் கலவரம் வெடித்த போது முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பிரதமராகப் பதவி வகித்தார்.
அவரது வீட்டுக்கு தீ வைக்கப்பட்ட போதிலும், அவர் பயந்து ஓடவில்லை. மாறாக ஏனையோரது வீடுகள் எரிக்கப்படுவதைத் தடுப்பதற்கு நடவடிக்கை எடுத்தார். ஆனால், நேபாள பிரதமர் அந்த சந்தர்ப்பத்தில் தப்பிச் சென்றதாலேயே ஏனையோர் பாதிக்கப்பட்டனர் என்பதே எனது நிலைப்பாடாகும். எனவே, தேசியத் தலைவர் என்ற ரீதியில் முன்னாள் ஜனாதிபதி ரணிலுக்கு அந்தக் கௌரவம் வழங்கப்பட வேண்டும்" என்றார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





அந்த முடிவுக்கு வரவில்லை என்றால்... இந்தியா பேரிழப்பை சந்திக்கும்: அமெரிக்கா அடுத்த மிரட்டல் News Lankasri

கங்குவா படத்திற்கு பின் சிறுத்தை சிவா இந்த ஹீரோவைத்தான் இயக்கப்போகிறாரா.. லேட்டஸ்ட் தகவல் Cineulagam

புலம்பெயர்தல் எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் செய்த வேடிக்கை செயல்: கமெராவில் சிக்கிய காட்சி News Lankasri
