வடமராட்சி கிழக்கு கேவில் கடற்றொழிலாளர்களால் மேற்கொள்ளப்பட்ட போராட்டம்
வடமராட்சி கிழக்கு, கேவில் கடற்றொழிலாளர்கள் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.
குறித்த போராட்டமானது நேற்று(30.12.2023) கட்டைக்காடு, கேவில் சந்தி பொது நோக்க மண்டபம் முன்பாக முன்னெடுக்கப்பட்டுள்ளது.
தொழில் தடைக்காலம்
சமாசத்தினால் தொழில் தடைக்காலம் அறிவிக்கப்பட்ட நிலையில் தடைகளை மீறி தொழிலில் ஈடுபட்டவர்களது இறால் கூடுகள் கற்றொழிலாளர் சமாசத்தினரால் அகற்றப்பட்டது.
இதனையடுத்து சமாச உறுப்பினர்களது கடற்றொழில் படகு மற்றும் வலைகள் இனம்தெரியாத நபர்களால் எரித்து நாசமாக்கப்பட்டுள்ளதோடு இதில் விசேட தேவையுடைய ஒருவரது படகு மற்றும் வலைகளும் எரித்து அழிக்கப்பட்டுள்ளது.
இதற்கு எதிர்புத் தெரிவித்தே கடற்றொழிலாளர்களின் குடும்பங்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்திய இழுவைப் படகு
இதன் போது நாசகார வேலையில் ஈடுபட்டவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்படவேண்டும், பாதிக்கப்பட்ட கடற்றொழிலாளர்களது வாழ்வாதாரம் மீழ் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என கோரிக்கை விடப்பட்டுள்ளது.
மேலும், கடலில் இந்திய இழுவைப் படகுகளால் வாழ்வாதாரம் அழிக்கப்படுவதோடு, சிறு தொழிலும் செயமுடியத நிலையுள்ளதாக கடற்றொழிலாளர்கள் கவலை வெளியட்டுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |


சரிகமப சீசன் 5 போட்டியாளர்களுக்கு மாபெரும் பரிசுத் தொகை அறிவிப்பு... இத்தனை லட்சத்தில் வீடா? Cineulagam

மூன்றாம் உலகப்போர் வெடித்தால்... பிரான்சுடன் அணு ஆயுத ஒப்பந்தம் செய்துகொள்ளும் பிரித்தானியா News Lankasri
