ஒலியமைப்பு சீரின்மையால் அடிக்கடி தடைப்பட்ட வடமராட்சி ஒருங்கிணைப்பு குழு கூட்டம்
வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச ஒருங்கிணைப்பு குழு கூட்டம் பிரதேச ஒருங்கிணைப்பு குழு தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான றஜீவன் ஜெயசந்திர்மூர்த்தி தலைமையில் வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச செயலக மண்டபத்தில் இடம்பெற்றது.
இதில் முதல் நிகழ்வாக சென்ற கூட்ட அறிக்கைகள் ஆராயப்பட்டு அதன் மேல் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பில் ஆராயப்பட்டன.
தெரிவு செய்யப்பட்ட வீட்டுத் திட்டங்கள்
தொடர்ந்து பருத்தித்துறை சாலையிலிருந்து வல்வெட்டித்துறை ஊடான அரச பேருந்து சேவை சீரின்மை மற்றும் பாடசாலை பேருந்துகள் தொடர்பில் ஆராயப்பட்டன.
மேலும் அது தொடர்பில் உரிய நடவடிக்கை எடுப்பதாக இலங்கை போக்குவரத்து சபை பருத்தித்துறை முகாமையாளர் தெரிவித்ததுடன் மிக விரைவில் பாடசாலை சேவைக்கென மட்டும் தனியான பேருந்து சேவை நடாத்துவதாகவும் உறுதியளித்தார்.

இதேவேளை வடமராச்சி தெற்கு மேற்கு பிரதேச செயலர் பிரிவில் 675இற்கு மேற்பட்ட குடும்பங்கள் காணி இன்றி இருப்பதாகவும், அவர்களுக்கு வழங்க அரச காணிகள் வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேசத்தில் இல்லை என்பதால் அயல் பிரதேச செயலகங்களுடன் தொடர்புகொண்டு பிற பிரதேசங்களுக்கு செல்வதற்கு விரும்பியோருக்கு காணிகளை வழங்க நடவடிக்கை எடுப்பது என்று தீர்மானிக்கப்பட்டது.
தெரிவு செய்யப்பட்ட வீட்டு திட்டங்களுக்கான அனுமதியும் மற்றும் செயற்றிட்டங்களுக்கான அனுமதிகளும் வழங்கப்பட்டதுடன் முச்சக்கர வண்டிகளுக்கு மீற்றர் பொருத்துவது உட்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
ஒலி அமைப்பு சீரின்மை
நேந்றைய ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் சரியான ஒலியமைப்பு இன்மையால் அடிக்கடி கூட்டம் தடைப்பட்டன.

இது தொடர்பாக சபையில் கேள்வி எழுப்பியபோது காசு தாருங்கள் நான் வாங்கி போடுகின்றேன் என்று தெரிவித்தார்.
இது தொடர்பில் மாவட்ட செயலரிடம் தொடர்பு கொண்டு கேட்டது போது ஒலி அமைப்பு சீர் செய்ய ரூபாய் 2.7 மில்லியன் ஒதுக்கீடு செய்யப்பட்டதாக முகாமையாளர் குறிப்பிட்டார்.
இதேவேளை கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எவரும் கலந்துகொள்ளவில்லை. கஜேந்திரகுமார் பொன்னம்பலம் சார்பாக செல்வராசா கஜேந்திரன் கலந்துகொண்டார்.
இன்றைய கூட்டத்தில் வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச செயலக அதிகாரிகள், தினைக்கள தலைவர்கள், வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச சபை தவிசாளர், உறுப்பினர்கள், கிராம மட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள் என பலரும் கலந்துகொண்டனர்.
