வடக்கில் அதிகரிக்கும் கோவிட் தொற்று: மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு(Video)

COVID-19 COVID-19 Vaccine Mannar Mullaitivu
By Keethan Aug 12, 2022 07:13 AM GMT
Report

மன்னார் மாவட்டத்தில் கடந்த 11 தினங்களில் மொத்தம் 103 கோவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி.வினோதன் தெரிவித்துள்ளார்.

மன்னாரில் உள்ள அலுவலகத்தில் இன்று(12) காலை இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,"மன்னார் மாவட்டத்தில் கடந்த 11 தினங்களாக கோவிட் தொற்று மிகவும் அதிகமாக காணப்படுகின்றமை கண்டறியப்பட்டுள்ளது.

இந்த வருடத்தில் மொத்தம் 967 கோவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள சந்தர்ப்பத்தில் இந்த மாதத்தின் முதல் 11 நாட்களில் மொத்தம் 103 கோவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

வடக்கில் அதிகரிக்கும் கோவிட் தொற்று: மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு(Video) | Vaccine Covid Infection North Mullaitivu Mannar

இந்த வருடத்தில் மொத்தமாக 6 நபர்கள் கோவிட் தொற்றால் உயிரிழந்துள்ளதுடன் மாவட்டத்தில் இதுவரை 40 நபர்கள் கோவிட் தொற்றால் உயிரிழந்துள்ளனர்.

தற்போது அடையாளம் காணப்பட்டுள்ள கோவிட் தொற்றானது சாதாரண தடிமன்,தலையிடி,தலைபாரம் ஆகிய அறிகுறிகளுடன் காணப்படுகின்றது.


இவர்களில் அதிகமானவர்கள் வீடுகளில் தங்கி இருந்து சிகிச்சை பெற்றுக்கொள்ளும் நிலையில் இருக்கிறார்கள். அதற்கு அமைவாக எம்மால் அடையாளம் காணப்பட்டுள்ள நோயாளர்களின் எண்ணிக்கை உண்மையான எண்ணிக்கையை விட மிகக் குறைவாக இருக்கும்.

103 நோயளர்கள் எம்மால் கண்டறியப்பட்டால் இதை விட 7 அல்லது 8 மடங்கு நோயாளர்கள் சிகிச்சைக்கு வைத்தியசாலைக்கு வருகை தராமல் சுய சிகிச்சை பெற்றுக்கொண்டு வீடுகளில் தங்கி இருக்கக் கூடும் என நம்பப்படுகிறது.

இந்த தொற்றானது சாதாரண நிலையில் காணப்பட்டாலும் கூட ஒரு சமூகத்தில் மிகவும்,குறுகிய காலத்தில் பரவும் போது திரிவடையக்கூடிய சாத்தியக்கூறுகள் காணப்படுகின்றது.

இவ்வாறு திரிவடைந்தால் வீரியம் கூடிய வைரஸ் ஒன்று இந்த சமூகத்தில் உருவாகி பரவினால் அதிக உயிரிழப்புகள் ஏற்படும் சந்தர்ப்பம் உள்ளது.

நாட்டை முடக்கல்

வடக்கில் அதிகரிக்கும் கோவிட் தொற்று: மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு(Video) | Vaccine Covid Infection North Mullaitivu Mannar

நாட்டின் தற்போதைய சூழ்நிலை காரணமாக பொதுமக்களை வீட்டில் தங்கி இருக்கவோ அல்லது பிரதேசங்களை முடக்கவோ முடியாத சூழ்நிலை ஏற்படுகிறது.

எனவே பொது மக்கள் இவ்வாறான சூழ்நிலையில் கட்டாயம் முக கவசங்களை அணிந்துக்கொள்ள வேண்டும். கூடிய அளவில் மக்கள் நடமாட்டம் அதிகரித்த இடங்களில் முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும்.

மாவட்டத்தில் இதுவரை 20 வயதிற்கு மேற்பட்ட 64 சதவீதமானவர்கள் முதலாவது மேலதிக வலுவூட்டல் தடுப்பூசி,அல்லது 3 வது பைசர் தடுப்பூசியை பெற்றுக் கொண்டுள்ளார்கள்.

இதேவேளை அனைவரும் தடுப்பூசியை பெற்றுக்கொண்டால் மட்டுமே இந்த தொற்று சங்கிலியை உடைக்க முடியும்.

எனவே மூன்றாவது அல்லது மேலதிக வலு தடுப்பூசியை பெற்றுக்கொள்ளாதவர்கள் உடனடியாக உங்கள் பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தில் அல்லது பொது சுகாதார பரிசோதகர்களை தொடர்பு கொண்டு தடுப்பூசியை பெற்றுக்கொள்ள முடியும்.

மேலும் 60 வயதிற்கு மேற்பட்டவர்கள்,நோய்வாய்ப்பட்டவர்கள்,மற்றும் 20 வயதிற்கு மேற்பட்ட விரும்பியவர்கள் தமது நான்காவது தடுப்பூசியை அல்லது 2 ஆவது மேலதிக வலுவூட்டல் தடுப்பூசியை பெற்றுக்கொள்ள முடியும்.

இவர்கள் சுகாதார வைத்திய அதிகாரிகளை நாடி நமது உதவிகளை பெற்றுக்கொள்ள முடியும்.

மன்னார் மாவட்டத்தின் நிலவரம்

இலங்கையில் மன்னார் மாவட்டத்திலேயே மிக குறைந்த அளவான கோவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன்,குறைந்த அளவான கோவிட் மரணங்களும் இடம் பெற்றுள்ளன.

இது சுகாதார திணைக்களம் மற்றும் ஏனைய திணைக்களங்களின் துரித நடவடிக்கை காரணமாகவும்,கடந்த காலங்களில் பொது மக்கள் வழங்கிய ஒத்துழைப்பு காரணமாகவும் சாத்தியமாகியது.

இவ்வாறான ஒரு ஒத்துழைப்பை தற்போதைய கடினமான கால கட்டத்திலும் எதிர்பார்த்துள்ளோம்.மக்கள் கட்டாயம் சுகாதார வழி முறைகளை கையாளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

இதேவேளை கடந்த வருடத்தின் இறுதியில் தொடங்கிய டெங்கு நோயின் தாக்கம் இந்த வருட ஆரம்பத்திலும் காணப்பட்டுள்ளது. இந்த வருடத்தில் தற்போது வரை 177 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

வடக்கில் அதிகரிக்கும் கோவிட் தொற்று: மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு(Video) | Vaccine Covid Infection North Mullaitivu Mannar

இவர்களில் அதிகமானவர்கள் மன்னார் தீவு பகுதிகளைச் சேர்ந்தவர்கள்.

தற்போது டெங்கு நுளம்பின் தாக்கம் குறைவடைந்திருந்தாலும்,மழை காலம் ஆரம்பிக்கும் போது டெங்கு நுளம்பின் தாக்கம் மீண்டும் அதிகரிக்க சந்தர்ப்பம் உள்ளது. எனவே பொது மக்கள் தமது சுற்றாடலை கட்டாயம் சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.

மடு திருத்தல திருவிழா

வடக்கில் அதிகரிக்கும் கோவிட் தொற்று: மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு(Video) | Vaccine Covid Infection North Mullaitivu Mannar

மடு திருத்தலத்தில் தற்போது திருவிழா இடம்பெற்று வருகின்றது.எதிர்வரும் 15ம் திகதி இறுதி திருவிழா திருப்பலி இடம்பெறவுள்ளது.

அதிக அளவிலான பொதுமக்கள் மன்னாரில் இருந்தும், நாட்டின் ஏனைய இடங்களில் இருந்தும் மடு திருத்தலத்திற்கு வருகை தந்து கொண்டிருக்கின்றனர்.

இந்த மக்களும் கோவிட் தடுப்பு நடவடிக்கைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும்.”என தெரிவித்துள்ளார்.  

செய்தி-ஆஷிக்

முல்லைத்தீவு மாவட்டம்

முல்லைத்தீவு மாவட்டத்தில் மீண்டும் புதிய கோவிட் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர்.பரிசோதனைகளின் படி மூவருக்கு கோவிட் தொற்று இனங்காணப்பட்டுள்ளதுடன் மல்லாவி பிரதேச மருத்துவமனையில் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனைகளில் ஒருவருக்கு கோவிட் தொற்று இனம் காணப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு மாவட்டத்தில் 4 பேர் கோவிட் தொற்றுக்கு இலக்காகியுள்ளார்கள் மீண்டும் நீண்ட காலத்தின் பின்னர் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளில் இவை இனங்காணப்பட்டுள்ளது.

எனவே மக்கள் அனைவரும் முகக்கவசம் அணிந்து சுகாதார விதிமுறைகளை பின்பற்றுமாறு சுகாதார பிரிவினர் அறிவித்துள்ளார்கள்.

மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு

24 Aug, 2026
கண்ணீர் அஞ்சலி

திருநெல்வேலி, கோண்டாவில், London, United Kingdom

19 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இலங்கை, Münster, Germany, கிளிநொச்சி, கொழும்பு

26 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தொண்டைமானாறு, Le Blanc-Mesnil, France

28 Aug, 2023
33ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம், Toronto, Canada

23 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், பிரித்தானியா, United Kingdom

26 Aug, 2016
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, கோண்டாவில், East Ham, United Kingdom

19 Aug, 2026
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், Fribourg, Switzerland

25 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Toronto, Canada

25 Aug, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பலாலி, Toronto, Canada, உருத்திரபுரம்

24 Aug, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, Wembley, United Kingdom

25 Aug, 2013
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொக்குத்தொடு, புதுக்குடியிருப்பு 2ம் வட்டாரம், Mullaitivu

27 Aug, 2023
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நாவற்காடு, வரணி

23 Aug, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கொழும்பு

23 Aug, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
முதலாம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், Ajax, Canada

03 Sep, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, பெரியதம்பனை, Heilbronn, Germany

19 Aug, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, கொழும்பு, ஸ்கந்தபுரம், London, United Kingdom

09 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, Mississauga, Canada

18 Aug, 2025
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, Scarborough, Canada

14 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US