மட்டக்களப்பு ஆடைத்தொழிற்சாலை ஊழியர்களுக்கு தடுப்பூசி
மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள மிகப்பெரிய ஆடைத்தொழிற்சாலையான தாளங்குடா பிறண்டெக்ஸ் ஆடைத்தொழிற்சாலை ஊழியர்களுக்குத் தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது.
குறித்த தொழிற்சாலை ஊழியர்களுக்கு ஞாயிற்றுக்கிழமை (13) கோவிட் தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளன.
சுமார் 500 பேர் இதன்போது தடுப்பூசிகளைப் பெற்றுக் கொண்டதாக மாவட்ட சுகாதார சேவைகள் பணியகம் தெரிவித்துள்ளது.
மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் கே.மயூரனின் நெறிப்படுத்தலில் மட்டக்களப்பு சுகாதார அதிகாரி வைத்தியர் கே.கிரிசுதனின் வழிகாட்டலில் இந்த தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.
குறித்த ஆடைத் தொழிற்சாலையில் 3000த்திற்கும் அதிகமான ஊழியர்கள் கடமை புரிகின்றனர். அண்மையில் ஏற்பட்ட கோவிட் தொற்றையடுத்து நூற்றிற்கும் மேற்பட்ட ஊழியர்கள் கோவிட் தொற்றிற்கு இலக்காகினர். இதனால் ஆடைத்தொழிற்சாலை இரு வாரகாலம் வரை மூடப்பட்டிருந்தது.
இத்தொழிற்சாலை ஊழியர்கள் அனைவருக்கும் கோவிட் தடுப்பூசி வழங்கப்படவுள்ளமை
குறிப்பிடத்தக்கது.







முட்டாள் தனமாக எப்போதும் குறைகூறும் பெண் ராசியினர் இவர்கள் தானாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan

சீனாவிற்கு புதிய அச்சுறுத்தல்., இந்தியாவைத் தொடர்ந்து P-8 Poseidon விமானத்தை வாங்கிய நாடு News Lankasri
