வீதி விபத்துக்களினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரிப்பு
இலங்கையில் 2025ஆம் ஆண்டில் நிகழ்ந்த வீதி விபத்துக்களினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை, 2024ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் சடுதியாக அதிகரித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொலிஸ் ஊடகப் பேச்சாளர் வெளியிட்டுள்ள தரவுகளின்படி, 2024ஆம் ஆண்டில் 2287 விபத்துக்கள் பதிவாகி 2388 உயிரிழப்புகள் ஏற்பட்டிருந்தன.
2025இல் பதிவான நிலைமை
ஆனால், 2025ஆம் ஆண்டில் இந்த எண்ணிக்கை சடுதியாக உயர்ந்து, 2562 மரண விபத்துக்களில் மொத்தம் 2710 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதேவேளை, வீதி விதிமீறல்களைக் கட்டுப்படுத்துவதற்காக இலங்கை பொலிஸாரினால் அறிமுகப்படுத்தப்பட்ட 'ஈ-டிராஃபிக்' (E-Traffic) கையடக்கத் தொலைபேசி செயலியில் புதிய வசதிகள் இந்த ஆண்டு முதல் இணைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.

செயலி மூலம் உடன் அறிவிக்கும் வசதி
இப்புதிய முறைமையின் கீழ், வீதிகளில் சட்டவிரோத அல்லது அபாயகரமான முறையில் வாகனங்களை ஓட்டுவதை அவதானிக்கும் பாதசாரிகள், பயணிகள் மற்றும் ஏனைய சாரதிகள் அது குறித்த தகவல்களை இந்தச் செயலி மூலம் உடனடியாகப் பொலிஸ் தலைமையகத்திற்கு அறிவிக்க முடியும்.
மக்கள் வழங்கும் இத்தகைய உடனுக்குடன் தகவல்கள், வீதி விபத்துக்களைக் குறைப்பதற்கும் விதி மீறல்களில் ஈடுபடுவோருக்கு எதிராக தகுந்த நடவடிக்கை எடுப்பதற்கும் பெரும் உதவியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
சுவிட்சர்லாந்தில் கேளிக்கை விடுதியில் தீ விபத்து: இத்தாலி மற்றும் பிரான்ஸ் நாட்டவர்கள் பாதிப்பு News Lankasri
15 பந்துகளில் 6 சிக்ஸர்களுடன் 47 ரன்! 4 விக்கெட்டுகளையும் வீழ்த்தி சம்பவம் செய்த வீரர் News Lankasri