அவசரகால சட்டம் நீடிப்பு அரத்தமற்றது:சாணக்கியன் கிளப்பும் சர்ச்சை
அவசரகாலச் சட்டத்தை நீடிக்க எடுத்த நடவடிக்கையை முறையாக தெளிவுப்படுத்த அரசாங்கம் தயங்குகிறது என்று இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் தெரிவித்துள்ளார்.
வழக்கமாக நாடாளுமன்றத்தில் மாதத்திற்கு ஒரு முறை அவசரகாலச் சட்டம் நீட்டிக்கப்படும். மேலும் இந்த மாதம் (ஜனவரி 6) முதல் மீண்டும் அவசரகாலச் சட்டம் நீட்டிக்கப்பட்டுள்ளது. ஆனால் இதற்கான குறிப்பிட்ட காரணம் தெளிவாக இல்லை.
அவசரகாலச் சட்டத்தின் அவசியம்
நாடாளுமன்றத்தில் நடைபெற்ற குழுக் கூட்டத்தில் அவசரகாலச் சட்டம் ஏன் தேவை என்று கேட்டபோது, காலி மாநகர சபையில் ஏற்பட்ட குழப்பம், பேரிடர் சூழ்நிலை காரணமாக மீமுரே கிராமத்திற்கு இன்னும் செல்ல முடியாத நிலை போன்ற விடயங்களுக்கு அவசரகாலச் சட்டம் தேவைப்படுகிறது என்று சபை முதல்வர் பிமல் ரத்நாயக்க குறிப்பிட்டிருந்தார்.
இருப்பினும், அவசரகாலச் சட்டம் குறித்து நாடாளுமன்ற விவாதம் தேவை என்றோம், எந்த விவாதமும் தேவையில்லை என்றும் அமைச்சர் பிமல் ரத்நாயக்க கூறினார்.

பின்னர், எதிர்க்கட்சிகள் கோரியபடி அதற்கு ஒரு மணி நேரம் அவகாசம் அளிக்க ஒப்புக் கொண்டதாக சாணக்கியன் சுட்டிக்காட்டினார்.
அவசரகாலச் சட்டம் மூலம்,வர்த்தமானி அறிவிப்பு மற்றும் இதர அறிவிப்புக்கள் அற்ற நிலையில் ஜனாதிபதியின் வார்த்தைகள் சட்டமாகிறது.
இது மற்ற அனைத்து சட்டங்களையும் மீறும் ஒரு சட்டம் என்றும், இது ஜனாதிபதியின் நிர்வாக அதிகாரத்திற்கு மற்றொரு வரம்பற்ற அதிகாரத்தை சேர்க்கிறது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.