ரணில் விற்பனை செய்யவிருந்த நிறுவனம்:அமைச்சர் லால்காந்த வெளியிட்ட தகவல்
நாங்கள் அரசாங்கத்தை ஏற்றுக் கொண்ட போது முன்னாள் ஜனாதிபதி ரணில் விற்பனைக்கு விட்டிருந்த மில்கோ நிறுவனம் மீட்டெடுக்கப்பட்டு இலாபகரமான நிறுவனமாக மாற்றப்பட்டுள்ளது.
அக்டோபர் 2025 நிலவரப்படி, நாங்கள் ரூ. 1490 மில்லியன் இலாபத்தை ஈட்டினோம். இது மில்கோவின் வரலாற்றில் மிக உயர்ந்த இலாபமாகும் என்று அமைச்சர் கே.டி. லால்காந்த தெரிவித்துள்ளார்.
மில்கோவின் அபிவிருத்தி
மில்கோ வரலாற்று சிறப்புமிக்க இலாபத்தைப் பதிவு செய்துள்ளதால் ஊழியர்களுக்கு போனஸ் வழங்கப்பட்டுள்ளது. ஊழியர்களைப் ஊக்குவிக்கும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்ட போனஸ் வழங்கும் நிகழ்வு நேற்று (31) நாரஹேன்பிட்டியில் உள்ள மில்கோ அலுவலக வளாகத்தில் நடைபெற்றது.
2026 ஆம் ஆண்டில் 15,000 பால் பண்ணை விவசாயிகளுக்கு இலவச பால் பண்ணையாளர் ஆயுள் காப்பீட்டை வழங்கவும் அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

மில்கோவின் வரலாற்றில் அதிக விற்பனை வருவாயைக் கொண்ட ஆண்டாக 2025 மாறியுள்ளது என்றும், அதற்காகக் கடுமையாக உழைத்த அனைவருக்கும் அவர் பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறார் என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.