சிகரெட் பில்டரை தடை செய்ய எடுக்கப்படும் நடவடிக்கை
சிகரெட் பில்டரை தடை செய்வதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுப்பதற்காக அரசு மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சு ஆகியவற்றுடன் புகையிலை மற்றும் மதுபானம் தொடர்பான தேசிய அதிகார சபை பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
அழிவடையாத கழிவுப் பொருட்களில் ஒன்றான சிகரெட் பில்டர்களை தடை செய்வது குறித்து தங்களின் நிறுவனம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக அதிகாரசபையின் தலைவர் டாக்டர் ஆனந்த ரத்நாயக்கவும் குறிப்பிட்டுள்ளார்.
பில்டர்களால் சுற்றுச்சூழலில் ஏற்படும் பாதிப்பு
இலங்கையில், ஒவ்வொரு நாளும் சுமார் ஆறு மில்லியன் சிகரெட் பில்டர்கள் சுற்றுச்சூழலில் சேர்கின்றன.
இது நாட்டின் உக்காத கழிவுப் பொருட்களில் ஒரு பெரிய பகுதியாகும். குறிப்பாக நீர் நிலைகளில் தேங்கும் சிகரெட் பில்டர்களால் ஏற்படும் தீங்கு அடையாளம் காணப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு (2025) சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவில் நடைபெற்ற 11வது புகையிலை கட்டுப்பாடு மாநாட்டில், நாட்டில் சிகரெட் பில்டர்களை தடை செய்வதற்கான சர்வதேச சமூகத்தின் முன்மொழிவை இலங்கை ஏற்றுக்கொண்டுள்ளதோடு தூய்மையான இலங்கை திட்டத்துடன் இணைந்து இந்தத் திட்டத்தை செயல்படுத்தவும் ஒப்புக் கொண்டுள்ளது.