கொத்மலை சுகாதார காரியாலயத்திற்குட்பட்ட பகுதிகளில் தடுப்பூசி ஏற்றும் பணி ஆரம்பம்
நுவரெலியா – அம்பகமுவ சுகாதார காரியாலயத்திற்குட்பட்ட பகுதி மற்றும் கொத்மலை சுகாதார காரியாலயத்திற்குட்பட்ட பகுதிகளில் வாழ்பவர்களுக்கான கோவிட் - 19 தடுப்பூசி ஏற்றும் பணி முன்னெடுக்கப்பட்டுள்ளது.
அந்தவகையில், அம்பகமுவ சுகாதார காரியாலயத்திற்குட்பட்ட பகுதிகளில் இன்று அத்தியாவசிய சேவைகளில் ஈடுபடும் அரச ஊழியர்கள், பொலிஸார், தோட்ட அதிகாரிகள் மற்றும் தோட்ட முன்கள பணியாளர்கள் என 2850 பேருக்கு கினிகத்தேனை மத்திய கல்லூரியில் தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளது.
அத்தோடு, மற்றும் கொத்மலை சுகாதார காரியாலயத்திற்குட்பட்ட பகுதிகளில் உள்ள அத்தியாவசிய சேவைகளில் ஈடுபடும் அரச ஊழியர்கள், பொலிஸார், தோட்ட அதிகாரிகள் மற்றும் தோட்ட முன்கள பணியாளர்கள் என 1066 பேருக்கு கொத்மலை பிரதேச செயலகத்தில் தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளது.
இந்த தடுப்பூசி ஏற்றும் பணியை இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் இன்று (10.06.2021) நேரடி பயணம் மேற்கொண்டு கண்காணித்துள்ளார்.
இந்த கண்காணிப்பில் பிரஜாசக்தியின் பணிப்பாளரும், கோவிட் தடுப்பூசி செயலணியின்
பிரதானியுமான பாரத் அருள்சாமி, மத்திய மாகாண சுகாதார பணிப்பாளர், நுவரெலியா
மாவட்ட சுகாதார பணிப்பாளர், இராணுவ அதிகாரிகள், ஆகியோர் கலந்து கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.




இந்துமாகடல் அரசியலில் தமிழர் வகிபாகம் என்ன..! 2 நாட்கள் முன்
சக்தியை முடித்த சந்தோஷத்தில் குணசேகரன், என்ன செய்வது என்ற பதற்றத்தில் ஜனனி...எதிர்நீச்சல் தொடர்கிறது ஸ்பெஷல் புரொமோ Cineulagam
2007ஆம் ஆண்டு தீபாவளிக்கு வெளிவந்த அழகிய தமிழ் மகன், வேல், பொல்லாதவன் படங்கள்.. பாக்ஸ் ஆபிஸ் வசூல் எவ்வளவு தெரியுமா? Cineulagam
பழனிவேலா இது, இப்படியொரு காரியத்தை செய்துவிட்டார், பாண்டியன் என்ன செய்வார்... பாண்டியன் ஸ்டோர்ஸ் அடுத்த கதைக்களம் Cineulagam