வடக்கு மாகாணத்தில் நிலவும் ஆளணி வெற்றிடம் குறித்து வெளியான தகவல்
வடக்கு மாகாணத்தில் வெற்றிடமாகவுள்ள தொழில்நுட்ப உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட சில தொழில்துறைக்கான ஆளணி வெற்றிடங்களை நிரப்புவதற்கான அனுமதி கிடைக்கப் பெற்றுள்ளதாகவும் விரைவில் அவை நிரப்பப்படும் எனவும் வடக்கு மாகாண ஆளுநரும், யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத்தலைவருமான நா.வேதநாயகன் தெரிவித்தார்.
யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் யாழ். மாவட்டச் செயலகத்தில் நேற்று(17.07.2025) கடற்றொழில், நீரியல்வளங்கள் மற்றும் கடல்வளங்கள் அமைச்சரும், யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான இ.சந்திரசேகர் தலைமையில் இடம்பெற்றது.
இந்த ஆண்டு இறுதிக்குள்
இதன்போது மேலும் கருத்துத் தெரிவித்த ஆளுநர், வடக்கு மாகாணத்துக்கு கடந்த ஆண்டுகளை விட 3 மடங்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
அந்த நிதியை விரைந்து – வினைத்திறனாக செலவு செய்து முடிக்கவேண்டும்.
எமக்கு ஒதுக்கப்பட்ட நிதி நூறு வீதமும் இந்த ஆண்டு இறுதிக்குள் செலவு செய்து முடிக்கப்படும். அதேநேரம் இதன் விளைவுகளையும் நாம் மதிப்பீடு செய்ய வேண்டும்.
மக்களுக்கு இதனால் எவ்வாறான பயன்கள் ஏற்பட்டன என்பது தொடர்பிலும் ஆராய வேண்டும்.
அதேநேரம், அடுத்த ஆண்டுக்கான திட்டங்களையும் இப்போதே தெரிவு செய்து முன்னுரிமை அடிப்படையில் இறுதிப்படுத்த வேண்டும். அபிவிருத்திப் பணிகள் சமச்சீராக கிடைக்கப்பெறுவதை பிரதேச செயலர்கள் உறுதிப்படுத்தவேண்டும் என்றும் ஆளுநர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





போர் எப்போது வேண்டுமானாலும் வெடிக்கலாம்... தயாராக இருக்குமாறு பிரான்ஸ் மருத்துவமனைகளுக்கு உத்தரவு News Lankasri
