17 நாட்களாக சுரங்கப்பாதையில் உயிருக்கு போராடிய தொழிலாளர்கள் மீட்பு
உத்தரகாண்ட் - உத்தரகாசி மாவட்டத்தின் சில்க்யாரா மலைப்பகுதியில் சுரங்கப்பாதையில் சிக்கியுள்ள 41 தொழிலாளர்கள் மீட்கப்பட்டுள்ளனர்.
உத்தரகாண்ட் - உத்தரகாசி மாவட்டத்தின் சில்க்யாரா மலைப்பகுதியில் 4.50 கிலோமீட்டர் தூரத்துக்கு மலைக்கு கீழ் சுரங்கப்பாதை அமைக்கும் பணி நடந்து வந்தது.
கடந்த 12 ஆம் திகதி நடந்த சுரங்கப்பாதை விபத்தில் தொழிலாளர்கள் 41 பேர் சிக்கிக் கொண்டனர். தொடர்ந்து இன்று (28) 17 ஆவது நாளாக மீட்புப் பணி நடைபெற்றது.
இந்நிலையில், சுரங்கத்தில் சிக்கிய 41 தொழிலாளர்களும் பத்திரமாக மீட்கப்பட்டு அருகிலுள்ள மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
முன்னதாக கடந்த தீபாவளி தினத்தன்று குறித்த சுரங்கத்தில் பணியாற்றிக்கொண்டிருந்த இந்த பணியாளர்கள், நிலச்சரிவு ஏற்பட்டமை காரணமாக சுரங்கத்தின் ஒரு பகுதியில் சிக்குண்டனர்.
எனினும் உடனடியாக அவர்களுக்கு தேவையான உணவு மற்றும் ஒக்சிஜன் என்பன வழங்கப்பட்டன.
இந்தநிலையில் இயந்திரத்தின் மூலம் அவர்கள் வெளியேற மாற்றுப்பாதை அமைக்க முயற்சிக்கப்பட்டபோதும் அது பலனிக்கவில்லை.
எனவே கைகளால் செங்குத்தாக துளையிடும் முயற்சி மேற்கொள்ளப்பட்டு அதன் மூலமே ஒவ்வொருவராக மீட்டெடுக்கப்பட்டுள்ளனர்.





யாரும் எதிர்ப்பார்க்காத நேரத்தில் ஆனந்தி கழுத்தில் தாலி கட்டிய அன்பு... சிங்கப்பெண்ணே பரபரப்பு புரொமோ Cineulagam

The Fantastic Four: First Steps மூன்று நாட்களில் செய்துள்ள வசூல்.. பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட் Cineulagam
