இலங்கையின் பொருளாதாரம் தொடர்பில் சிரேஷ்ட விரிவுரையாளர் போட்டுடைத்த விடயம்
நாட்டில் தேர்தல் ஒன்று நடக்கவிருப்பதால் பொருளாதாரம் வளர்ச்சியடைந்துள்ளதாக அறிவிக்க வேண்டிய கட்டாயத்தில் அரசாங்கம் உள்ளதாக கொழும்பு பல்கலைக்கழகத்தின் பொருளியல் துறை சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி எம்.கணேசமூர்த்தி தெரிவித்துள்ளார்.
இலங்கை பொருளாதார முன்னேற்றத்தை அடைந்து வருவதாக அரசாங்கம் மக்கள் மத்தியில் மாயை ஒன்றை ஏற்படுத்த முனைவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையின் பொருளாதார வளர்ச்சி தொடர்பில் ஊடகமொன்றுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
உரிய முறைியல் பின்பற்றப்படாத கொள்கைகள்
மேலும் தெரிவிக்கையில், பணவீக்கத்தை கட்டுப்படுத்துவதற்காக, அரசாங்கத்தின் கொள்கைகள் உரிய வகையில் பின்பற்றப்படவில்லை. இதனிடையே, பொருளாதார வளர்ச்சி என்பது வெறுமனே பொருளாதார காரணிகளால் மாத்திரம் தீர்மானிக்கப்படுவதல்ல.
அது அரசியல் காரணிகளாலும் தீர்மானிக்கப்படும். நாட்டில் தேர்தல் ஒன்று நடக்கவிருப்பதால் பொருளாதாரம் வளர்ச்சியடைந்துள்ளதாக அறிவிக்க வேண்டிய கட்டாயத்தில் அரசாங்கம் உள்ளது.
இலங்கையின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்த நிலையில் இருந்து மீள்வதாக மாத்திரமே காட்டப்பட்டுள்ளது. பொருளாதார வீழ்ச்சியிலிருந்து மீள்வதற்கான இடர்கள் நீங்கவில்லை என குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |