தங்க நகை வாங்க காத்திருப்போருக்கான செய்தி
இலங்கையில் இன்றைய தினம் 22 கரட் தங்கப் பவுணொன்றின் விலை 171,500 ரூபாவாக பதிவாகியுள்ளது.
இதன்படி, 24 கரட் 1 கிராம் தங்கத்தின் விலை 23,380 ரூபாவாகவும், 24 கரட் 8 கிராம் (1 பவுண்) தங்கத்தின் விலை 187,000 ரூபாவாகவும் காணப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
22 கரட் தங்கத்தின் விலை
அத்துடன், 22 கரட் 1 கிராம் தங்கத்தின் விலை 21,440 ரூபாவாகவும், 22 கரட் 8 கிராம் (1 பவுண்) தங்கத்தின் விலை 171,500 ரூபாவாகவும் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், 21 கரட் 1 கிராம் தங்கம் 20,460 ரூபாவாகவும், 21 கரட் 8 கிராம் (1 பவுண்) தங்கத்தின் விலை 163,700 ரூபாவாகவும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை கொழும்பு செட்டியார்தெரு தகவல்களின் படி 24 கரட் தங்கப்பவுணொன்றின் விலை 176,500 ரூபாவாகவும், 22 கரட் தங்கப்பவுணொன்றின் விலை 163,300 ரூபாவாகவும் மாற்றமின்றி தொடர்வதாக தெரியவருகிறது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |