இலங்கை ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி கடந்த வெள்ளிக்கிழமையுன் ஒப்பிடுகையில் இன்று (24.02.2024) சிறிய அதிகரிப்பை பதிவு செய்துள்ளது.
இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின் படி இந்த விடயம் தெரியவந்துள்ளது.
டொலர் பெறுமதி
அதன்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 291 ரூபாய் 51 சதம், விற்பனைப் பெறுமதி 300 ரூபாய் 8 சதம்.
ஸ்ரேலிங் பவுண்ட் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 368 ரூபாய் 17 சதம், விற்பனைப் பெறுமதி 382 ரூபா 9 சதம்.

யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 304 ரூபாய் 86 சதம், விற்பனைப் பெறுமதி 317 ரூபாய் 35 சதம்.
சுவிஸ் பிராங் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 322 ரூபாய் 50 சதம், விற்பனைப் பெறுமதி 337 ரூபாய் 70 சதம்.
கனேடிய டொலர்
கனேடிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 204 ரூபா 5 சதம், விற்பனைப் பெறுமதி 212 ரூபாய் 77 சதம்.
அவுஸ்திரேலிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 184 ரூபாய் 23 சதம், விற்பனைப் பெறுமதி 193 ரூபாய் 63 சதம்.

சிங்கப்பூர் டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 216 ரூபாய் 98 சதம், விற்பனைப் பெறுமதி 226 ரூபாய் 88 சதம்.
ஜப்பானிய யென் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 1 ரூபாய் 94 சதம், விற்பனைப் பெறுமதி 2 ரூபாய் 1 சதம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
இன்னும் திருந்தாத மயிலின் அப்பா, இப்போது செய்த காரியம், வெடிக்கப்போகும் பிரச்சனை... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam
ஆண்டுக்கு ரூ 1 கோடி சம்பளம்... வெறும் 60 நொடிகளில் இந்தியரின் விசாவை நிராகரித்த அதிகாரிகள் News Lankasri
மனைவிக்கு மயக்க மருந்து கொடுத்துக் கொன்ற மருத்துவர்: ரகசியக் காதலிக்கு அனுப்பிய செய்தி சிக்கியது News Lankasri