யுஎஸ்எய்ட் நிதியுதவி இரத்து தொடர்பில் வெளியாகியுள்ள தகவல்
சர்வதேச வளர்ச்சிக்கான அமெரிக்க நிறுவனமான, யுஎஸ்எய்ட் நிறுவனம், இன்றுவரை எந்தவொரு உதவி இரத்து குறித்தும் அரசாங்கத்திற்கு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை என இலங்கையின் நிதிப் பிரதி அமைச்சர் ஹர்ஷன சூரியபெரும தெரிவித்துள்ளார்.
நேற்று நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு
இலங்கையுடன் செய்து கொண்ட ஒப்பந்தங்களின் படி எந்தவொரு உதவி இரத்துக்கள் குறித்தும் USAID இலங்கை அரசாங்கத்திற்கு அதிகாரப்பூர்வமாக அறிவிக்க கடமைப்பட்டுள்ளது என்று அவர் கூறியுள்ளார்.
முன்னதாக, நிதி துஸ்பிரயோகம் என்ற அடிப்படையில், அமெரிக்காவின் யுஎஸ்எய்ட் நிதியுதவிகளை, புதிய ஜனாதிபதி, டொனால்ட் டிரம்ப் 90 நாட்களுக்கு இரத்து செய்வதாக அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





ஆசிய நாடொன்றிற்கு எலோன் மஸ்க் விடுத்த கடும் எச்சரிக்கை... 1 மில்லியன் மக்களை இழக்கலாம் News Lankasri

உடல் உறையும் நிலையில் லொறிக்குள் சிக்கியிருந்த புலம்பெயர்ந்தோர்... சாரதியால் அம்பலமான கொடூரம் News Lankasri
