தேசிய மக்கள் சக்தியின் நகர்வு! குற்றம் சுமத்தும் தமிழர் தரப்பு
நாங்கள் இராணுவ முகாமை அகற்றுவது தொடர்பில் நாடாளுமன்றத்தில் குரல் கொடுப்போம் எனவும், ஆனால் தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர்களால் இதனை செய்ய மாட்டார்கள் என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் இளையதம்பி சிறிநாத் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு மாவட்டம் ஈரளகுளம் குதிகளில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,
தேசிய அரசாங்கங்கள்
”தேசிய அரசாங்கங்கள் மாறுபடும் என்பது உண்மை. தற்போது ஆட்சிக்கு வந்து இருக்கும் அரசாங்கம் கூட எதிர்காலத்தில் மாறலாம்.
ஆனால், இலங்கைத் தமிழரசுக் கட்சியானது எப்பொழுதும் தமிழ் மக்களுடன் தொடர்ந்து பயணிக்கும் என்பதில் எந்தவிதமான மாறுபட்ட கருத்தும் இல்லை.
அதேபோல் தேசிய மக்கள் சக்திக்கு தமிழ் மக்கள் தொடர்பில் எந்த நல்ல அபிப்பிராயங்களும் இல்லை என்பது உண்மை.
தேசிய மக்கள் சக்தியில் தலைமைப் பீடத்தின் கதையை கேட்டே அவர்கள் செயற்பட வேண்டும் என்று ஓர் நிலைப்பாடு உள்ளது.
ஆனால் தமிழ் மக்களின் குரலாய், தமிழ் மக்களுக்கு அநீதி இழைக்கப்படும் போது போராட்டங்கள் மூலமும் நாடாளுமன்றத்தில் எதிரொலிக்க எம்மாலே முடியும்” என்றார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



இவ்வளவு சீக்கிரம் முடியுமென கனவிலும் நினைக்கவில்லை: நாம் தமிழர் கட்சியிலிருந்து விலகிய காளியம்மாளின் பதிவு News Lankasri

கும்பத்தில் உதிக்கும் புதன்: வாழ்க்கையில் சிக்கலை சந்திக்கப்போகும் 2 ராசி உங்க ராசி இருக்கா? Manithan
