”ஒரு மணித்தியாலம்” அமெரிக்க ஜனாதிபதியாக பதவி வகித்த கமலா ஹாாிஸ்
தமிழகத்தின் பூர்வீகத்தைக் கொண்ட கமலா ஹாரிஸ், ஒரு மணித்தியாலம் 25நிமிடங்களுக்கு அமெரிக்க ஜனாதிபதியாக பதவி வகித்துள்ளார்.
மருத்துவ பரிசோதனைக்காக அமெரிக்க ஜனாதிபதி, ஜோ பைடன், வோஷிங்டனில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு அவருக்கு பெருங்குடல் தொடர்பாக, மயக்கவியல் முறையில் சிகிச்சை அளிக்கப்பட்டது.
இதற்கு முன்னதாக சிகிச்சையில் இருந்து குணமாகும் வரை தனது ஜனாதிபதி அதிகாரத்தை துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ்க்கு தற்காலிகமாக வழங்க ஜோ பைடன் உத்தரவிட்டார்.
சுமாா் 1.25 மணி நேரம் அதிகாரம் வழங்கப்பட்ட நிலையில் அமெரிக்க ஜனாதிபதியின் இருக்கையில் கமலாஹாரிஸ் அமரவில்லை.
மாறாக கமலா ஹாரிஸ், தற்காலிக அமெரிக்க ஜனாதிபதியாக பதவி வகித்ததாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
இந்தநிலையில் வழக்கமான மருத்துவ பரிசோதனை முடிந்த பிறகு ஜோ பைடன் மீண்டும் அமெரிக்க ஜனாதிபதியாக தமது பணியை ஆரம்பித்தார்.
இதற்கிடையில் அமெரிக்காவில் பெண் ஜனாதிபதியாக பதவி வகித்த முதல் பெண் என்ற பெருமையை துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ் பெற்றுக்கொண்டார்.
நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 20