அமெரிக்காவில் திடீரென கடலில் வீழ்ந்த உலங்கு வானுார்தி! (வீடியோ)
அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் மியாமி கடற்கரையை ஒட்டிய பகுதியில், வானில் பறந்து கொண்டிருந்த உலங்கு வானுார்தி ஒன்று திடீரென கடலில் விழுந்து விபத்துக்குள்ளானது.
இந்த உலங்கு வானுார்தியில் மொத்தம் 3 பேர் பயணம் செய்துள்ளனர்.
இதன்போது பலர் அந்த கடற்கரையில் நீராடிக்கொண்டிருந்தனர். எனினும் சம்பவத்தின்போது எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை.
தகவல் அறிந்து அங்கு சென்ற காவல்துறையினர் உலங்கு வானுார்தியில் இருந்தவர்களை மீட்டனர்.
அவர்களில் ஒருவருக்கு மாத்திரம் சிறிய காயம் ஏற்பட்டுள்ளது.
இந்த விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
This afternoon at 1:10 p.m., MBPD received a call of a helicopter crash in the ocean near 10 Street. Police and @MiamiBeachFire responded to the scene along with several partner agencies. Two occupants have been transported to Jackson Memorial Hospital in stable condition.
— Miami Beach Police (@MiamiBeachPD) February 19, 2022
1/2 pic.twitter.com/heSIqnQtle