அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் இலங்கைக்கு உதவும் பிரதமர் நம்பிக்கை
அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் இலங்கைக்கு உதவும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
நாட்டை கட்டியெழுப்பும் யோசனை முன்வைக்கப்பட்டதன் பின்னர் இவ்வாறு நாடுகள் உதவும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
யோசனைத் திட்டம்
அமைச்சரவையையும் இணைத்துக் கொண்டு நாட்டை கட்டியெழுப்பும் திட்டம் உருவாக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார். எதிர்வரும் இரண்டு மூன்று வாரங்களில் இந்த யோசனைத் திட்டத்தை சமர்ப்பிக்க முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
வீழ்ச்சியடைந்துள்ள பொருளாதாரத்தை 2023ம் ஆண்டில் மீட்டு எடுக்க முடியும் எனவும் 2024 மற்றும் 2025ம் ஆண்டுகளில் அதனை முன்னோக்கி நகர்த்த முடியும் எனவும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டை கட்டியெழுப்புதல் குறித்து தற்போது முன்வைக்கப்பட்டுள்ள யோசனைத் திட்டம் தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்திய நாடுகள் ஆதரவினை வெளியிட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
ஜே.வி.பி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி
ஜே.வி.பி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் வீட்டுத் தோட்ட திட்டத்திற்கு அரசாங்க ஆதரவு வழங்கப்படும் என ரணில் குறிப்பிட்டுள்ளார்.
தமது திட்டத்தை விடவும் சிறந்த திட்டங்கள் இருந்தால் அதனை நாடாளுமன்றில் சமர்ப்பிக்க முடியும் என பிரதமர் கொழும்பு ஊடகங்களிடம் நேற்று தெரிவித்துள்ளார்.
எரிபொருள் பெற்றுக்கொள்வதற்காக ஜனாதிபதி ஐக்கிய அரபு இராஜ்ஜியத்துக்கு விஜயம் |
அரசாங்கம் கலைய வேண்டும்: அநுரகுமார திஸாநாயக்க வலியுறுத்தல் |

இயற்கை விதியும் ஈழத் தமிழர் அரசியலும் 2 நாட்கள் முன்

பிறப்பிலேயே சக்திவாய்ந்த மற்றும் கவர்ச்சிகரமான ராசியினர் இவர்கள் தானாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan

Post office -ன் இந்த 5 சேமிப்புத் திட்டங்களில் முதலீடு செய்தால் FD-யை விட அதிக வட்டியைப் பெறலாம் News Lankasri
