ட்ரம்ப் - புடின் பேச்சு தோல்வியடைந்தால்...இந்தியா மீது இரண்டாம் கட்ட வரி! மீண்டும் எச்சரிக்கை விடுத்த அமெரிக்கா
ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்கும் இந்தியா மீது இரண்டாம் கட்ட வரிகள் மேற்கொள்ளப்படலாம் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தரப்பிலிருந்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
உக்ரைன் போரை ஆதரிக்கும் விதமாக ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்குவதால் இந்திய பொருட்களுக்கு டொனால்ட் ட்ரம்ப் 50 சதவீதம் வரிவிதித்துள்ளார்.
எச்சரிக்கை விடுத்த அமெரிக்கா
இந்தநிலையில் அமெரிக்காவின் நிதி செயலாளர் ஸ்காட் பெசென்ட், இந்தியாவின் மீதான வரிகள் மேலும் அதிகரிக்கப்படலாம் என்று எச்சரித்துள்ளார்.
ரஷ்ய ஜனாதிபதி புடின் நாளை அலாஸ்காவில் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் உடன் உக்ரைன் போர் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் ரஷ்ய ஜனாதிபதி புடின் இடையே நடைபெறவுள்ள பேச்சுவார்த்தை திருப்திகரமாக அமையாவிட்டால், இந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
புளூம்பெர்க் தொலைக்காட்சிக்கு பெசென்ட் அளித்த பேட்டியில், ரஷ்யாவுடன் பேச்சுவார்த்தை சுமூகமாக முடியவில்லை என்றால், வரி அதிகரிக்கப்படலாம் என குறிப்பிட்டுள்ளார்.





ஐநாவைக் கையாள்வது எவ்வாறு..! 21 மணி நேரம் முன்

ஏர் கனடா விமான சேவை திடீர் ரத்து: பாதிப்பில் 130,000 பயணிகள்! பணியாளர்களின் கோரிக்கை என்ன? News Lankasri
