இலங்கை இராணுவத்தின் சிப்பாய்க்கு எதிராக ரஷ்யாவில் போர்க்குற்ற வழக்கு
இலங்கை இராணுவத்தின் கொமாண்டோ படைப்பிரிவில் பணியாற்றிய முன்னாள் சிப்பாய் ஒருவருக்கு எதிராக ரஷ்யாவில். போர்க் குற்ற வழக்கொன்று தொடரப்பட்டுள்ளது.
குறித்த படைப்பிரிவில் கடமையாற்றி அதன் பின்னர் தற்போதைக்கு உக்ரைன் படையினருடன் இணைந்து ரஷ்யாவுக்கு எதிராக போரிட்டு வந்த லஹிரு காவிந்த என்பவருக்கு எதிராகவே ரஷ்யாவில் போர்க்குற்ற வழக்கு தொடரப்பட்டுள்ளது.
ஜனாதிபதி பாதுகாப்புப் பிரிவிலும்
இவர் உள்ளிட்ட படைச்சிப்பாய்கள் குழுவொன்று குர்ஸ்க் பிராந்தியத்தில் ரஷ்ய பிரஜைகளான சிவிலியன்களை விரட்டியடித்தும், அச்சுறுத்தியும் கொள்ளையடித்துள்ளதுடன், ஒருசில படுகொலைகளையும் அரங்கேற்றியுள்ளனர்.
இவர்கள் சில மாதங்களே குர்ஸ்க் பிரதேசத்தில் நிலைகொண்டிருந்து விட்டு அங்கிருந்து அகன்று சென்றுள்ளனர்.
இந்நிலையில் லஹிரு காவிந்த உள்ளிட்ட உக்ரைனின் வெளிநாட்டுச் சிப்பாய்களின் படைப்பிரிவினர் குர்ஸ்க் பிராந்தியத்தில் மேற்கொண்ட குற்றச் செயல்கள் தொடர்பில் ரஷ்யாவில் வழக்கொன்றும் தொடரப்பட்டுள்ளது.
இலங்கையில் குருநாகல் மாவட்டத்தின் மாவத்தகம பிரதேசத்தைச் சேர்ந்த லஹிரு காவிந்த, கொமாண்டோ படைப்பிரிவில் பணியாற்றிய காலத்தில் ஜனாதிபதி பாதுகாப்புப் பிரிவிலும் கடமையாற்றியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



