அதிகரிக்கும் இந்தியா - ரஷ்யா நெருக்கம் : மாஸ்கோவில் அமைச்சர்கள் முக்கிய சந்திப்பு
ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்குவதால் அமெரிக்கா இந்திய பொருட்களுக்கு 50 சதவீத வரி விதித்ததில் இருந்து சர்வதேச அரசியலில் இந்தியாவின் நகர்வுகள் பெரும் பேசு பொருளாக மாறி வருகின்றன.
ரஷ்யா - இந்தியா இரு நாடுகளுக்கும் இடையிலான உயர் மட்ட சந்திப்புகள் மற்றும் வருகைகள் பெருமளவில் நடந்து வருகின்றன.
நரேந்திர மோடியின் அழைப்பின் பேரில்
அண்மையில் ,ந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ரஷ்யா சென்றிருந்தார்.
இந்த சூழலில், இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் மற்றும் ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் இடையே மற்றொரு முக்கிய சந்திப்பு நடைபெற உள்ளது.
FM Sergey #Lavrov's schedule:
— MFA Russia 🇷🇺 (@mfa_russia) August 13, 2025
🗓 On August 21, FM Sergey #Lavrov will hold talks with FM of India @DrSJaishankar in Moscow.
The Ministers will discuss key issues on our bilateral agenda, as well as key aspects of cooperation within international frameworks.#RussiaIndia pic.twitter.com/ck4qG1Z14P
இந்த மாதம் ஆகஸ்ட் 21 ஆம் திகதி மாஸ்கோவில் இருவரும் சந்திக்கவுள்ளதோடு, இதை ரஷ்ய வெளியுறவு அமைச்சகம் அதிகார பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளது.
அறிக்கையில், இரு தலைவர்களும் இருதரப்பு பிரச்சினைகள் மற்றும் சர்வதேச மன்றங்களில் ஒத்துழைப்பு குறித்து விவாதிப்பார்கள் என்று கூறப்பட்டுள்ளது.
முன்னதாக கடந்த மாதம் நடைபெற்ற பிரிக்ஸ் உச்சிமாநாடு மற்றும் ஜூலை 15 அன்று நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் வெளியுறவு அமைச்சர்கள் கூட்டத்தின் போது இருவரும் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதற்கிடையில், பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பின் பேரில் ரஷ்ய ஜனாதிபதி புடின் இந்த வருட இறுதிக்குள் இந்தியாவுக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளமை குறி்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
நல்லூர் கந்தசுவாமி கோவில் 17 ஆம் நாள் திருவிழா





ஐநாவைக் கையாள்வது எவ்வாறு..! 6 மணி நேரம் முன்

மளிகைப்பொருட்கள்: கனடாவுக்கும் இந்தியாவுக்கும் என்ன விலை வித்தியாசம்? ஒரு வைரல் வீடியோ News Lankasri

நேற்று முதல் மனைவியுடன் நிகழ்ச்சி, இன்று மாதம்பட்டி ரங்கராஜ் 2வது மனைவி செய்த வேலையை பாருங்களே... Cineulagam
