இலங்கை கவிஞர் தீபச்செல்வனுக்கு அமெரிக்கா விசா மறுப்பு

Sri Lankan Tamils United States of America India
By Rakesh Jun 28, 2023 07:24 PM GMT
Report

அமெரிக்காவில் நடைபெறும் இலக்கிய மாநாட்டுக்குச் செல்வதற்காக விண்ணப்பித்திருந்த இலங்கைக் கவிஞர் தீபச்செல்வனுக்கு விசா மறுக்கப்பட்டுள்ளது.

இரண்டு முறை விண்ணப்பித்திருந்தும் அமெரிக்கத் தூதரகம் தனக்கு விசா வழங்க மறுத்துவிட்டதாகக் கூறியிருக்கும் தீபச்செல்வன், எதிர்காலத்தில் அயல்நாடான இந்தியாவுக்குச் செல்லவும் தனக்கு விசா மறுக்கப்படலாம் என்று கவலை தெரிவித்துள்ளார்.

நாவலாசிரியர், கவிஞர், சிறுகதை எழுத்தாளர், திரைப்படப் பாடலாசிரியர், வசனகர்த்தா எனப் பல தளங்களில் இயங்கி வருபவர் கவிஞர் தீபச்செல்வன்.

அவர் எழுதிய ‘பதுங்கு குழியில் பிறந்த குழந்தை’, ‘நான் ஸ்ரீலங்கன் இல்லை’ ஆகிய கவிதைத் தொகுப்புகளும், ‘நடுகல்’ என்ற நாவலும் தமிழ் வாசகப் பரப்பில் மிகுந்த கவனம் பெற்றவை.

இலங்கை கவிஞர் தீபச்செல்வனுக்கு அமெரிக்கா விசா மறுப்பு | Us Visa Denied For Sri Lankan Poet Deepachelvan

சமீபத்தில் அவர் எழுதிய ‘பயங்கரவாதி’ நாவல் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கின்றது.

இந்நிலையில், அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள வட அமெரிக்க தமிழ் சங்கத்தின் (FeTNA) 36 ஆவது தமிழ் விழா ஜூன் 30 ஆம் திகதி தொடங்குகின்றது.

இந்த நிகழ்வில் பங்குபெறுமாறு தீபச்செல்வனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இதற்காக இலங்கைத் தலைநகர் கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதரகத்தில் விசாவுக்காக அவர் விண்ணப்பித்திருந்தார்.

தூதரக அதிகாரிகளின் மறுப்பு

ஆனால், அவர் நாடு திரும்புவார் என்ற நம்பிக்கை அல்லது அமெரிக்காவில் குடியேறிவிடுவார் என்று கூறி அமெரிக்கத் தூதரகம் அவருக்கு விசா வழங்க மறுத்துவிட்டது.

இரண்டாவது தடவையாக விசா கோரி விண்ணப்பித்தபோதும், அதே காரணம் கூறப்பட்டு விசா மறுக்கப்பட்டது.

இது குறித்து ஊடகங்களிடம் பேசிய தீபச்செல்வன், “இலங்கையில் தொடர்ந்து வாழ வேண்டும்; ஆசிரியர் பணி செய்ய வேண்டும்; தொடர்ந்து இலங்கையில் இருந்து எழுத வேண்டும் என்பதுதான் என்னுடைய நோக்கம் என்று கூறியபோதும் அமெரிக்கத் தூதரக அதிகாரிகள் அதைப் பொருட்படுத்தவில்லை.

ஒடுக்கப்பட்ட இலங்கை மக்களின் குரலாய் இந்த மண்ணில் வாழ்ந்து உரிமைகளைப் பெறுவதே என் எண்ணம். அதற்கு ஜனநாயக தளத்தில் எம் பண்பாடுகள், அடையாளங்கள் சார்ந்த குரலை முன்வைக்கவே மாநாட்டுக்குச் செல்ல வேண்டும் என்று விரும்பினேன்.

ஆனால், பொருத்தமில்லாத காரணத்தைச் சொல்லி எனக்கு விசா வழங்க மறுத்துவிட்டார்கள். அமெரிக்கத் தூதரகமே மறுத்துவிட்டதால், இனி அயல்நாடான இந்தியாவுக்குச் செல்லவும் எனக்கு விசா வழங்கப்படுவது சந்தேகம்தான்” என தெரிவித்துள்ளார்.

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW   


மரண அறிவித்தல்

உரும்பிராய் மேற்கு, கோப்பாய் தெற்கு

14 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Zürich, Switzerland

11 Apr, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, Scarborough, Canada

09 Apr, 2026
மரண அறிவித்தல்

தாவடி, யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

13 Apr, 2026
மரண அறிவித்தல்

தொண்டைமானாறு, மல்லாவி

11 Apr, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், London, United Kingdom

13 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, பிரான்ஸ், France

15 Apr, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

களுதாவளை, சாவகச்சேரி, மட்டக்களப்பு, London, United Kingdom

14 Apr, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், கொழும்பு, Paris, France, Zürich, Switzerland

13 Apr, 2026
31st Day Remembrance & Thankyou Message

யாழ்ப்பாணம், தெஹிவளை

15 Mar, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

25 Mar, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, வட்டக்கச்சி இராமநாதபுரம்

14 Apr, 2018
10ம் ஆண்டு நினைவஞ்சலி

குரும்பசிட்டி, மட்டக்களப்பு

14 Apr, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

முரசுமோட்டை, Pforzheim, Germany

13 Apr, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Montreal, Canada, Toronto, Canada

12 Apr, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய் மத்தி

12 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, சாவகச்சேரி, London, United Kingdom, சுவிஸ், Switzerland

12 Apr, 2021
20ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், சுவிஸ், Switzerland, கொழும்பு

12 Mar, 2026
மரண அறிவித்தல்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, Montreal, Canada

09 Apr, 2020
மரண அறிவித்தல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

06 Apr, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US