அமெரிக்க துணை இராஜாங்கச் செயலாளர் நூலாண்ட் இலங்கைக்கு விஜயம்
அமெரிக்காவின் அரசியல் விவகாரங்களுக்கான துணை இராஜாங்கச் செயலாளர் விக்டோரியா நுலண்ட் இலங்கைக்கு விஜயம் செய்துள்ளார்.
இவலர் சற்று முன்னர் இலங்கையை வந்தடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இலங்கையில் பொருளாதார சுபீட்சத்தை எட்டும் முனைப்புக்களுக்கு உதவும் வகையில் இந்த விஜயம் அமையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
கவனம் செலுத்தப்பட்டுள்ள விடயம்
மனித உரிமைகளை பாதுகாத்தல் மற்றும் நல்லிணக்கத்தை ஏற்படுத்தல் ஆகிய விவகாரங்கள் தொடர்பிலும் நூலாண்ட் இந்த சந்திப்பில் கவனம் செலுத்த உள்ளார்.
சீன மற்றும் இந்திய முக்கிய பிரதிநிதிகள் இலங்கைக்கு விஜயம் செய்திருந்த நிலையில் அமெரிக்க முக்கிய பிரதிநிதியொருவரும் இலங்கை விஜயம் செய்வது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்காவிற்கும் இலங்கைக்கும் இடையில் ராஜதந்திர உறவுகள் ஆரம்பிக்கப்பட்டு 75 ஆண்டுகள் பூர்த்தியாகும் நிலையில் நூலாண்ட் இலங்கைக்கு விஜயம் செய்துள்ளார்.
நூலாண்ட், இலங்கையின் முக்கிய அரசியல் பிரதிநிதிகள் உள்ளிட்ட பல்வேறு முக்கியஸ்தர்களுடன் பேச்சுவார்த்தை நடாத்த உள்ளமை குறிப்பிடத்தக்கது.