ஹவுதி கிளர்ச்சியாளர்களை இலக்கு வைத்து அமெரிக்கா, பிரித்தானியா கூட்டு வான்வழித் தாக்குதல்
ஹவுதி கிளர்ச்சியாளர்களின் இலக்குகள் மீது அமெரிக்கா மற்றும் பிரித்தானிய படையினர் கூட்டு வான்வழித் தாக்குதல்கள் ஆரம்பித்துள்ளனர்.
அண்மைக்காலமாக செங்கடலில் பயணிக்கும் வர்த்தக கப்பல்களை இலக்கு வைத்து யேமனின் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் நடத்தியிருந்த தாக்குதல்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்த தாக்குதல் நடத்தப்படுவதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஹவுதி கிளர்ச்சியாளர்களின் தாக்குதல்களை அமெரிக்கா, பிரித்தானியா உள்ளிட்ட பல நாடுகள் கண்டித்திருந்ததுடன், அதில் இருந்து பாதுகாப்பு வழங்க பதில் நடவடிக்கைகளை எடுக்கவுள்ளதாகவும் அறிவித்திருந்தன.
வான்வழித் தாக்குதல்
இந்தநிலையில், அமெரிக்கா, பிரித்தானியா உள்ளிட்ட நாடுகள் ஹவுதி கிளர்ச்சியாளர்களின் நிலைகளை இலக்கு வைத்து தாக்குதல்களை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சனா, சாதா, தாமர் மற்றும் ஹூதைதா உள்ளிட்ட ஹவுதி நிலைகள் மீது வான்வழித் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. விமானம், கப்பல்கள் மற்றும் நீழ்மூழ்கி கப்பல்கள் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
