யேமன் மீது அமெரிக்கா - பிரித்தானியா கூட்டு வான்வழி தாக்குதல்
தென்மேற்கு யேமன் நகரான தைஸில் உள்ள பாடசாலை ஒன்றில் பிரித்தானியா - அமெரிக்கா நடத்திய கூட்டு வான்வழி தாக்குதலில் இரண்டு பேர் பலியாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஹவுதி கிளர்ச்சியாளர்களுடன் இணைந்த தொலைக்காட்சி ஒன்று வெளியிட்ட செய்தியை மேற்கோள் காட்டியே இந்த செய்தி வெளியாகியுள்ளது.
தாக்குதலில் இரண்டு பேர் கொல்லப்பட்டதாகவும், ஐந்து பேர் படுகாயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
ஹவுதி ஏவுகணை அமைப்பு
கடந்த 24 மணி நேரத்தில், அமெரிக்கப் படைகள் இரண்டு ஈரானிய ஆதரவு ஹவுதி ஏவுகணை அமைப்புகளையும் ஒரு ஆதரவு வாகனத்தையும் யேமனின் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் தாக்கி அழித்ததாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும், அமெரிக்கப் படைகள் செங்கடலில் ஒரு ஹவுதி ஆளில்லா விமானத்தையும் அழித்ததாக கூறப்படுகிறது.
யேமன் கிளர்ச்சிக் குழு அமெரிக்காவின் MQ-9 ஆளில்லா விமானத்தை தாக்கி வீழ்த்தியமைக்கு எதிராகவே குறித்த தாக்குதல் முன்னெடுக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

புலம் பெயர் தமிழர்களால் சிறீலங்காவை இலங்கையாக மாற்றிக்கொள்ள முடியுமா..! 19 மணி நேரம் முன்

மனைவியும் மாமியாரும் தினமும் துஷ்பிரயோகம் செய்வதாக அதிர்ச்சி புகார்! ரகசிய கமெரா மூலம் அம்பலமான கொடுமை News Lankasri

மௌன ராகம் சீரியலில் நடித்த இந்த சிறுமியை நினைவு இருக்கா.. இப்போது எப்படி இருக்கிறார் பாருங்க Cineulagam
