இந்திய நாடாளுமன்ற தேர்தலில் தலையிட முயற்சிக்கும் அமெரிக்கா :ரஷ்யா பகிரங்க குற்றச்சாட்டு
இந்திய (India) நாடாளுமன்ற தேர்தலில் அமெரிக்கா தலையிட முயற்சி செய்வதாக ரஷ்யா பகிரங்க குற்றம் சாட்டை முன்வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ரஷ்ய நாட்டின் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் மரியா ஜாகரோவா பத்திரிகையாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு கூறியள்ளார்.
உரிமை மீறல்கள்
இதன்போது அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில் "காலிஸ்தான் பிரிவினைவாதி குர்பத்வந்த் சிங் பன்னுன் கொலை சதியில் இந்தியர்களுக்கு தொடர்பு இருப்பதாக ஆதாரமற்ற குற்றச்சாட்டை அமெரிக்கா சுமத்துகிறது. இப்படி இந்தியாவின் மத சுதந்திரம் சார்ந்து ஆதாரமற்ற வகையில் அமெரிக்க தொடர்ந்து பேசி வருகிறது.
இந்தியாவில் நிலவும் அரசியல் சமநிலையை சீர்குலைக்க வேண்டும் என்பதுதான் இதற்கு காரணம். இந்திய பொதுத் தேர்தலை சிக்கலாக்கும் நோக்கில் அமெரிக்கா இப்படி செய்கிறது" என குறிப்பிட்டுள்ளார்.
அண்மையில் மத நம்பிக்கை சார்ந்த உரிமை மீறல்களில் இந்தியா உட்பட 16 நாடுகள் ஈடுபடுவதாக சர்வதேச மத சுதந்திரத்துக்கான அமெரிக்க ஆணையம் குற்றச்சாட்டு சுமத்தியிருந்தமைக்கு இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் கண்டனம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
you may like this





Super Singer: சூப்பர் சிங்கர் அரங்கையே கண்ணீர் மூழ்கடித்த அம்மா, மகன்! விஜய் ஆண்டனி கொடுத்த அங்கீகாரம் Manithan

இத்தனை கோடிக்கு விலை போய்யுள்ளதா மதராஸி படம்.. தமிழ்நாட்டில் மாஸ் காட்டிய சிவகார்த்திகேயன் Cineulagam

கடும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில்... இந்தியாவிற்கு எதிரான முடிவெடுத்த ஆசிய நாடொன்று News Lankasri

குணசேகரனுக்கே செக் வைத்த தர்ஷன், ஜனனி கொடுத்த ஐடியா.. எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் பரபரப்பு புரொமோ Cineulagam

திருப்பதி வெங்கடேஸ்வரர் அருள்தான் காரணம் - 121 கிலோ தங்கத்தை காணிக்கையாக செலுத்திய NRI News Lankasri

பிரித்தானியாவில் மகன் பிறந்து.,இரண்டு மாதங்களில் மாயமான 28 வயது தந்தை: காத்திருந்த அதிர்ச்சி News Lankasri
