இலங்கை அரசாங்கத்தின் முயற்சிகளுக்கு அமெரிக்கா ஆதரவளிக்கும்: ஜீலி சுங்
இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜீலி சுங் மற்றும் சுற்றாடல் துறை அமைச்சர் மனுஷ நாணயக்கார ஆகியோருக்கு இடையில் இன்று(31) சந்திபொன்று இடம்பெற்றுள்ளது.
தனது டுவிட்டர் பதிவில் ஜீலி சுங் இதனை பதிவிட்டுள்ளார்.
Spoke today w/ Minister @Nanayakkara77 about conditions faced by Sri Lanka’s workforce and the path to a more equitable and stable economy, including ways the US can support SL govt’s proposed economic reforms & efforts to foster a business-enabling environment that attracts FDI. pic.twitter.com/3vjkGYLVlb
— Ambassador Julie Chung (@USAmbSL) August 31, 2022
பொருளாதார சீர்திருத்தங்கள்
இதன்போது, இலங்கை பணியாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் மற்றும் நிலையான பொருளாதாரத்திற்கான பாதை என்பன பற்றி கலந்துரையாடப்பட்டுள்ளது.
இதேவேளை, இலங்கை அரசாங்கத்தினால் முன்மொழியப்பட்ட பொருளாதார சீர்திருத்தங்கள் மற்றும் அந்நிய நேரடி முதலீட்டை ஈர்க்கும், வணிகத்தை ஊக்குவிக்கும் சூழலை, வளர்ப்பதற்கான முயற்சிகளுக்கு அமெரிக்கா ஆதரவளிக்கும் வழிகள் உட்பட பல விடயங்கள் கலந்துரையாடப்பட்டுள்ளன.