மத்திய கிழக்கில் போருக்கு தயாராகிறதா அமெரிக்க விமானத் தாங்கிகள்!

Israel Middle East Iran-Israel War
By Dharu Jun 21, 2025 10:30 PM GMT
Report

இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையிலான சண்டை இரண்டாவது வாரமாகத் தொடரும் வேளையில், அமெரிக்கா மத்திய கிழக்கில் ஏற்கனவே பெரிய அளவில் தனது இருப்பை அதிகரித்து வருகிறது.

இவ்வாறு மத்திய கிழக்கில் அமெரிக்காவின் இரண்டு விமானந்தாங்கி கப்பல்கள், ஒன்பது அழிப்பு கப்பல்கள் மற்றும் பல போர் விமானப் பிரிவுகள் கூடியுள்ளமையானது இஸ்ரேல் - ஈரான் போர் அபாயத்தன்மையை வலுப்பெறவைத்துள்ளது.

இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்காவும் ஈரானை தாக்குவதாக அந்நாட்டு தரப்புகள் குற்றம் சுமத்தியுள்ள நிலையில் நிலைநிறுத்தப்பட்டுள்ள அமெரிக்காவின் துருப்புக்கள் தொடர்பில் கேள்விகளும் வலுத்துள்ளன.

கடந்த ஒன்றரை ஆண்டுகளாக, அமெரிக்கப் படைகள் தரை, வான் மற்றும் கடற்படை ஆயுதங்களை அமெரிக்க மத்திய கட்டளைப் பொறுப்பின் பகுதிக்குள் அனுப்பியுள்ளன.

மொசாட்டில் இந்தியர்கள்! இரகசியமாக தரையிரங்கிய சீனாவின் இராணுவ விமானங்கள்

மொசாட்டில் இந்தியர்கள்! இரகசியமாக தரையிரங்கிய சீனாவின் இராணுவ விமானங்கள்

தடுப்பு நடவடிக்கை

இவை இரண்டும் ஈரானுக்கு எதிரான தடுப்பு நடவடிக்கைகளாகவும், ஏமனில் ஹவுதிகளுக்கு எதிரான ஒரு வருடத்திற்கும் மேலான சண்டையின் ஒரு பகுதியாகவும் உள்ளன.

தற்போது இந்தப் பகுதியில் சுமார் 40,000 அமெரிக்க துருப்புக்கள் உள்ளதாக கூறப்படுகிறது.

மத்திய கிழக்கில் போருக்கு தயாராகிறதா அமெரிக்க விமானத் தாங்கிகள்! | Us To Strengthen Defenses In The Middle East

இதில் ஒரு கடற்படை தாக்குதல் குழுவும், மற்றொரு விமான தாக்குதல் குழுவும் மத்தியகிழக்கை நோக்கி விரைகின்றன. 

குறிப்பாக பல போர் விமானப் படைகள் மற்றும் அமெரிக்காவின் மிகவும் மேம்பட்ட ஏவுகணை பாதுகாப்பு இடைமறிப்பான்களில் ஒன்றான THAAD அமைப்புக்களையும் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அலி கமேனி நியமித்த புதிய தலைமைத் தளபதி.. படைபலம் குறித்து பெருமிதம் கொள்ளும் ஈரான்!

அலி கமேனி நியமித்த புதிய தலைமைத் தளபதி.. படைபலம் குறித்து பெருமிதம் கொள்ளும் ஈரான்!

ஈரானை தாக்கும் அபாயம்

ட்ரம்ப் நிர்வாகம் ஈரானை தாக்கும் அபாயம் உள்ளதால், தெஹ்ரான் அணு ஆயுதங்களைப் பெறுவதைத் தடுக்கும் நோக்கத்துடன், பென்டகன் சமீபத்தில் கூடுதல் விமான மற்றும் கடற்படை ஆயுதங்களை அந்தப் பகுதிக்கு அனுப்பியது. இருப்பினும், மார்ச் மாதத்தில் அந்த நாடு அணு ஆயுதங்களை உருவாக்குவதைத் தொடரவில்லை என்று அமெரிக்க உளவுத்துறை கண்டறிந்தது.

மத்திய கிழக்கில் போருக்கு தயாராகிறதா அமெரிக்க விமானத் தாங்கிகள்! | Us To Strengthen Defenses In The Middle East

மத்திய கிழக்கில் தற்போது அமெரிக்கப் படைகள் பெரிய அளவில் குவிக்கப்பட்டுள்ளன. இதில் இரண்டு விமானந்தாங்கி கப்பல்கள், ஒன்பது அழிப்பு கப்பல்கள் மற்றும் பல போர் விமானப் பிரிவுகள் அடங்கும்.

பஹ்ரைன், குவைத், கட்டார் மற்றும் ஐக்கிய அரபு இராஜ்சியத்தில் உள்ள முக்கிய தளங்கள், ஜோர்தான் மற்றும் சிரியாவில் உள்ள சிறிய தளங்கள் உட்பட, இப்பகுதியில் 10 தளங்களை அமெரிக்க இராணுவம் மத்தியகிழக்கில் பராமரிக்கின்றது.

ஈரானுடனான பதற்றங்கள் அதிகரித்து வருவதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என சில அமெரிக்க பாதுகாப்பு அதிகாரிகள் கூறியுள்ளனர்.

டொனால்ட் டிரம்பை அமைதிக்கான நோபல் பரிசுக்கு பரிந்துரைக்கும் பாகிஸ்தான்..!

டொனால்ட் டிரம்பை அமைதிக்கான நோபல் பரிசுக்கு பரிந்துரைக்கும் பாகிஸ்தான்..!

USS Carl Vinson விமானந்தாங்கி குழு

இது அரேபிய கடலில் உள்ளது, இதில் விமானந்தாங்கி கப்பல், விமானப் பிரிவு 2, கப்பல்-எதிர்ப்பு ஏவுகணைகளுடன் கூடிய கப்பல் USS பிரின்ஸ்டன் மற்றும் Arleigh Burke-class அழிப்பு கப்பல்களான யு.எஸ்.எஸ். ஸ்டெரெட் மற்றும் யு.எஸ்.எஸ். வில்லியம் பி. லாரன்ஸ் ஆகியவை அடங்கும்.

மத்திய கிழக்கில் போருக்கு தயாராகிறதா அமெரிக்க விமானத் தாங்கிகள்! | Us To Strengthen Defenses In The Middle East

மேலே குறிப்பிட்டதற்கு அமைய விமானப் பிரிவு 2இல் 50ற்கும் மேற்பட்ட போர் மற்றும் தாக்குதல் விமானங்கள் உள்ளதாக கூறப்படுகிறது.

இதில் மூன்று எஃப்/ஏ-18இ/எஃப் விமானப் பிரிவுகள், ஒரு எஃப்-35சி பிரிவு மற்றும் ஒரு இ/ஏ-18ஜி க்ரோலர் (F/A-18E/F aircraft wings, an F-35C wing, and an E/A-18G Crawler electronic warfare wing) ஆகிய விமானங்கள் உள்ளதாக கூறப்படுகிறது.

USS Nimitz விமானந்தாங்கி குழு

இந்த போர் கப்பலானது தென் சீனக் கடலில் இருந்து மத்திய கிழக்கை நோக்கி விரைந்து வருகிறது. இதன் வருகை முன்னதாகவே திட்டமிடப்பட்டிருந்தாலும், இஸ்ரேல்-ஈரான் மோதல்கள் காரணமாக இதன் வருகை துரிதப்படுத்தப்பட்டுள்ளது.

மத்திய கிழக்கில் போருக்கு தயாராகிறதா அமெரிக்க விமானத் தாங்கிகள்! | Us To Strengthen Defenses In The Middle East

இது நான்கு Arleigh Burke-class அழிப்பு கப்பல்களுடன் வருகைத்தருவதாக கூறப்படுகிறது.

மற்றும் விமானப் பிரிவு 17 உடன் ஒத்த வானூர்தி திறன்களைக் இந்த அமைப்பு கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.

குவாமை நோக்கி நகரும் B-2 விமானங்கள்! அமெரிக்காவின் முக்கிய காய்நகர்த்தல்

குவாமை நோக்கி நகரும் B-2 விமானங்கள்! அமெரிக்காவின் முக்கிய காய்நகர்த்தல்

USS  Additional destroyers கப்பல்கள்

கிழக்கு மத்தியதரைக் கடலில் யு.எஸ்.எஸ். சல்லிவன்ஸ், யு.எஸ்.எஸ். அர்லி பர்க் மற்றும் யு.எஸ்.எஸ். தாமஸ் ஹட்னர்(USS Sullivans, USS Arley Burke and USS Thomas Hudner ) ஆகிய மூன்று destroyers கப்பல்கள் நிலைகொண்டுள்ளன.

மத்திய கிழக்கில் போருக்கு தயாராகிறதா அமெரிக்க விமானத் தாங்கிகள்! | Us To Strengthen Defenses In The Middle East

இவை ஏவுகணை தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபடும் திறன் கொண்டவையாக வடிவமைக்கப்பட்டுள்ளன.

மேலும் இவற்றின் இரண்டு USS Additional destroyers கப்பல்கள் செங்கடலில் நிலைக்கொண்டுள்ளன.

ஏனையவை பஹ்ரைனில் உள்ள 5வது கடற்படை தலைமையகத்தில் உள்ளதாக கூறப்படுகிறது.

அமெரிக்க போர் விமானப் பிரிவுகள்

அமெரிக்க விமானப்படை குவைத்தில் உள்ள அலி அல்-சலேம் விமானத் தளத்தில் 386ஆவது விமானப் பயணப் பிரிவையும், கட்டாரில் உள்ள அல் உடைட் விமானத் தளத்தில் 379வது விமானப் பயணப் பிரிவையும் வைத்துள்ளது.

மத்திய கிழக்கில் போருக்கு தயாராகிறதா அமெரிக்க விமானத் தாங்கிகள்! | Us To Strengthen Defenses In The Middle East

இவை F-16, F-15E, மற்றும் F-35 விமானங்களையும், MQ-9 Reaper ஆளில்லா விமானங்களையும் கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.

இவை இஸ்ரேலுக்கு எதிரான ஈரானிய ஏவுகணைகள் மற்றும் ஆளில்லா விமானங்களைத் தடுக்க உதவியுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த இராணுவக் குவிப்பு இஸ்ரேல்-ஈரான் மோதல்களுக்கு மத்தியில் அமெரிக்காவின் தற்காப்பு மற்றும் தாக்குதல் திறன்களை வலுப்படுத்துவதற்காகவும், ஈரானுக்கு எதிரான தடுப்பு நடவடிக்கையாகவும் உள்ளது.  

மத்திய கிழக்கில் நடந்து வரும் சண்டை பரவினால், இந்தப் பிராந்தியத்தில் உள்ள பல நிறுவல்கள் மற்றும் கப்பல்கள் ஆபத்தில் இருக்கக்கூடும்.

காசாவில் இஸ்ரேலியப் போர் தொடங்கியவுடன் பிராந்திய வன்முறை அதிகரித்ததால், கடந்த இரண்டு ஆண்டுகளில் ஈராக்கிற்குள் உள்ள ஈரான் ஆதரவு போராளிகளால் பலர் குறிவைக்கப்பட்டனர்.

இந்நிலையில் பல அச்சுறுத்தல்களுக்கு மத்தியில், ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி இந்த வாரம் சமூக ஊடகங்களில் தனது சொந்த எச்சரிக்கையில், "இந்த மோதலில் அமெரிக்கா இராணுவ ரீதியாக நுழைந்தால் அவர்கள் அனுபவிக்கும் தீங்கு நிச்சயமாக ஈடுசெய்ய முடியாததாக இருக்கும்" என்று பதிவிட்டமை குறிப்பிடத்தக்கது.

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீராவியடி, நீர்வேலி, Torcy, France

05 Jan, 2025
மரண அறிவித்தல்

சுன்னாகம், மலேசியா, Malaysia, கொழும்பு, Toronto, Canada

20 Dec, 2025
மரண அறிவித்தல்

Seremban, Malaysia, Kuching, Malaysia, கொழும்பு, சுழிபுரம், London, United Kingdom, Toronto, Canada

22 Dec, 2025
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Toronto, Canada

20 Dec, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, முரசுமோட்டை, பிரான்ஸ், France, கனடா, Canada

19 Dec, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, மன்னார், Scarborough, Canada

19 Dec, 2025
மரண அறிவித்தல்

தொல்புரம், கொழும்பு, Schwyz, Switzerland, Markham, Canada

19 Dec, 2025
மரண அறிவித்தல்

ஜெயந்திநகர், பாரதிபுரம், பூநகரி, Wembley, United Kingdom

22 Dec, 2025
மரண அறிவித்தல்

பொலிகண்டி, Scarborough, Canada

22 Dec, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நாவாந்துறை, London, United Kingdom

19 Dec, 2025
மரண அறிவித்தல்

ஏழாலை, யாழ்ப்பாணம், Zürich, Switzerland

21 Dec, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாவி யோகபுரம், கொழும்பு, Kuala Lumpur, Malaysia, Toronto, Canada, அளவெட்டி

25 Dec, 2024
மரண அறிவித்தல்

ஆனைப்பந்தி, சிட்னி, Australia

21 Dec, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, நல்லூர், கைதடி

25 Dec, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில் மேற்கு, Markham, Canada

24 Dec, 2021
33ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, புங்குடுதீவு 3ம் வட்டாரம்

25 Dec, 1992
மரண அறிவித்தல்

கரவெட்டி, London, United Kingdom

21 Dec, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, Markham, Canada

22 Dec, 2025
மரண அறிவித்தல்

எழுவைதீவு, நாரந்தனை, Vejle, Denmark, Horsens, Denmark

20 Dec, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
கண்ணீர் அஞ்சலி

சுன்னாகம், கிளிநொச்சி

22 Dec, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, ஏழாலை தெற்கு

24 Dec, 2015
12ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Saint-Maur-des-Fossés, France

18 Dec, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, சுவிஸ், Switzerland

22 Dec, 2017
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, கொழும்பு 5

23 Dec, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், கொக்குவில், Scarborough, Canada

24 Dec, 2024
மரண அறிவித்தல்

வல்வெட்டி, தெல்லிப்பளை, Toronto, Canada

21 Dec, 2025
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் தெற்கு, Birmingham, United Kingdom

22 Dec, 2019
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைத்தீவு 5ம் வட்டாரம், Anaipanthy

22 Dec, 2015
கண்ணீர் அஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், யாழ்ப்பாணம், கனடா, Canada

17 Dec, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, கொழும்பு, London, United Kingdom

26 Nov, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US