டொனால்ட் டிரம்பை அமைதிக்கான நோபல் பரிசுக்கு பரிந்துரைக்கும் பாகிஸ்தான்..!
இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான அண்மைய மோதலைத் தீர்க்க உதவியதற்காக, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பை அமைதிக்கான நோபல் பரிசுக்கு பரிந்துரைப்பதாக பாகிஸ்தான் இன்று தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், குறித்த பரிந்துரை, ஈரானின் அணுசக்தி நிலையங்களைத் தாக்குவதில் இஸ்ரேலுடன் சேருவது குறித்து மீண்டும் ஒருமுறை, டிரம்ப்பை சிந்திக்க தூண்டக்கூடும் என்று, பாகிஸ்தானில் உள்ள சில ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.
அச்சுறுத்தல்
இதேவேளை, இஸ்ரேலின் நடவடிக்கையை சர்வதேச சட்ட மீறல் மற்றும் பிராந்திய ஸ்திரத்தன்மைக்கு அச்சுறுத்தல் என்று பாகிஸ்தான் கண்டித்துள்ளது.
கடந்த மே மாதம், டிரம்ப்பின் எதிர்பாராத போர் நிறுத்த அறிவிப்பு, அணு ஆயுத எதிரிகளான இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான நான்கு நாள் மோதலுக்கு திடீரென முற்றுப்புள்ளி வைத்தது.
இருதரப்பு ஒப்பந்தம்
எனினும், அணு ஆயுதப் போரைத் தணித்ததாகவும், மில்லியன் கணக்கான உயிர்களைக் காப்பாற்றியதாகவும், குறிப்பிட்டிருந்த அவர்,அதற்கான பெருமை தனக்குக் கிடைக்காது என்று டிரம்ப் பலமுறை சுட்டிக்காட்டியிருந்தார்.
இந்த நிலையில், அமெரிக்க இராஜதந்திர தலையீடு இந்தியாவுடன் சண்டையை முடிவுக்குக் கொண்டுவந்தது என்பதை பாகிஸ்தான் ஒப்புக்கொள்கிறது எனினும், அது, இந்திய-பாகிஸ்தான் இராணுவங்களுக்கும் இடையிலான இருதரப்பு ஒப்பந்தம் என்று இந்தியா கூறுகிறது.





ஐ.நா ஒப்பாரி மண்டப நாட்டாமைக்கு ஈழத் தமிழரின் கடிதம் 2 மணி நேரம் முன்

IQ Test: இரண்டில் ஏழை குடும்பம் எது? மூளையை சலவைச் செய்து கண்டுபிடிங்க.. 5 வினாடிகள் மட்டுமே! Manithan

மகாநதி சீரியலில் கதாநாயகியாக நடிக்கும் சிறகடிக்க ஆசை சீரியல் கோமதி பிரியா.. குவியும் வாழ்த்துக்கள் Cineulagam
