ஈரானிய ஏவுகணை தாக்குதலின் பின்னணி: உள்நுளையும் அமெரிக்கா!
ஈரானிய ஏவுகணை தாக்குதலில் இருந்து இஸ்ரேல் தற்காத்துக் கொள்ளவும், பிராந்தியத்தில் இராணுவத்தை பாதுகாக்கவும் அமெரிக்கா உதவ தயாராக இருப்பதாக அந்நாட்டு ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
"இந்த தாக்குதல்களுக்கு எதிராக தம்மை இஸ்ரேல் தற்காத்துக் கொள்ளவும், பிராந்தியத்தில் உள்ள அமெரிக்க பணியாளர்களை பாதுகாக்கவும் தயாராக உள்ளது என்பதை நாங்கள் வெளிப்படுத்தியுள்ளோம் என பைடன் சுட்டிக்காட்டியுள்ளார்.
This morning, @VP and I convened our national security team to discuss Iranian plans to launch an imminent missile attack against Israel.
— President Biden (@POTUS) October 1, 2024
We discussed how the United States is prepared to help Israel defend against these attacks, and protect American personnel in the region.
லெபனானில் தெஹ்ரானின் ஹிஸ்புல்லா அமைப்புக்கு எதிரான இஸ்ரேலின் தாக்குதலுக்கு பதிலடியாக இஸ்ரேல் மீது குறித்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இஸ்ரேலிய முகாம்கள்
மேலும், ஜெருசலேம் மற்றும் ஜோர்தான் நதி பள்ளத்தாக்கில் இஸ்ரேலியர்கள் முகாம்களில் தங்கவைக்கப்பட்ட பின்னர் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இது தொடர்பில் ஈரான் தரப்பு கருத்து தெரிவிக்கையில், ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியால் பிறப்பிக்கப்பட்ட உத்தரவுக்கு அமையவே இஸ்ரேல் மீது ஏவுகணைகள் ஏவப்பட்டன” என கூறியுள்ளது.
ஈரான் தாக்குதலைத் தொடர்ந்து இஸ்ரேலின் வான்வெளி பயணங்கள் மறு அறிவித்தல் வரை நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இஸ்ரேலிய தரைப்படைகள் லெபனான் மீது தாக்குதல்களை நடத்தியதைத் தொடர்ந்து ஈரானிய ஏவுகணை முன்னதாக ஏவப்பட்டது
18 ஆண்டுகளாக தொடரும் முறுகல் நிலைக்கு மத்தியில் லெபனானுக்கான முதல் தரைவழி தாக்குதலை மேற்கொண்ட இஸ்ரேலின் இந்த நகர்வு, மத்திய கிழக்கில் ஈரானின் ஆயுதமேந்திய படையான ஹிஸ்புல்லாவுக்கு சவாலை ஏற்படுத்தியது.
காசா போர்
இது ஒரு வருடத்திற்கு முன்னர் ஆரம்பமான காசா போருக்கு பின்னரான பிராந்திய தாக்குதலின் மிகப்பெரியதாக கருதப்பட்டது.
இதன் தொடர்ச்சியில் இடம்பெற்ற தீவிர வான்வழித் தாக்குதல்களில் ஹிஸ்புல்லாவின் உயர்மட்டத் தலைவர்கள் பலரைக் இஸ்ரேல் கொன்று வீழ்த்தியது.
இவற்றை உற்று நோக்கிய ஈரான் இஸ்ரேலுக்கு பதிலடி கொடுப்பதாக உறுதியளித்தது.
இஸ்ரேலின் நெருங்கிய மற்றும் மிகவும் சக்திவாய்ந்த ஆதரவாளரான அமெரிக்கா அதைக் கட்டுப்படுத்த முயற்சித்த போதிலும், பிராந்திய பதற்றமானது எல்லைகளில் போர் பரவக்கூடும் என்ற அச்சத்தை எழுப்பியது.
சமீபத்தில் படுகொலை செய்யப்பட்ட மூத்த ஹிஸ்புல்லா தலைவரின் மரணத்திற்கு முன்னதாக, இஸ்ரேல் முஹம்மது ஜாஃபர் காசிரை படுகொலை செய்ததாகக் கூறியது,
அவரை ஈரான் மற்றும் அதன் துணை அமைப்புகளிடமிருந்து ஆயுதப் பரிமாற்றங்களுக்குப் பொறுப்பான தளபதி என இஸ்ரேல் விவரித்தது.
இதன் தொடர்ச்சியில், லெபனானில் நடத்தப்பட்ட போரில் நூற்றுக்கணக்கானவர்கள் இஸ்ரேலின் தாக்குதலுக்கு பலியாகியிருந்தனர்.
இஸ்ரேல் லெபனான் மீது 1982 முதல் பிராந்திய எதிர்ப்பை வெளிப்படுத்தி வருகிறது.
இது 1982 இல் லெபனானின் நடந்த உள்நாட்டுப் போருக்கு மத்தியில் மேற்கொள்ளப்பட்ட இஸ்ரேல் படையெடுப்பின் தொடர்ச்சியாக இந்த தாக்குதல்கள் கருதப்படுகின்றன.
இஸ்ரேலிய இராணுவம்
தொடர்ந்து இஸ்ரேலிய இராணுவம் இறுதியாக 2000 இல் லெபனானில் இருந்து வெளியேறின.
ஆனால் 2006 இல் ஹிஸ்புல்லாவுக்கு எதிராக மற்றொரு பெரிய போரை நடத்த இஸ்ரேல் திட்டமிட்டனர்.
அதன் பின்னரே இரு நாடுகளுக்குமான எல்லையானது ஐ.நாவால் கண்காணிக்கப்பட்டு வருகிறது.
ஐக்கிய நாடுகள் சபையின் அமைதி காக்கும் படையினர் ஆங்காங்கே இஸ்ரேலிய ஊடுருவல்களைக் கண்டதாகவும் ஆனால் முழு அளவிலான படையெடுப்பைக் காணவில்லை என்றும் சமீபத்திய போருக்கு முன்னர் தெரிவிக்கப்பட்டது.
தொடர்ந்து லெபனானில் இஸ்ரேலியப் படைகளை எதிர்க்க ஈரானால் உருவாக்கப்பட்ட ஷியைட் போராளிகளான ஹிஸ்புல்லா, ஏவுகணைகள் மற்றும் வான்வெளி தாக்குதல் சக்தியை கொண்ட லெபனானின் மிக சக்திவாய்ந்த ஆயுதப் படையாக உருவெடுத்துள்ளது.
வலிமையான அரசியல்
இது லெபனானின் வலிமையான அரசியல் தரப்பாகவும் பிற்காலத்தில் உருவெடுத்தது.
மேலும் மத்திய கிழக்கு முழுவதும் ஈரானிய ஆதரவு ஆயுத இயக்கங்களின் வலையமைப்பில் இது முன்னணியில் உள்ளது.
இஸ்ரேல் தனது 30 ஆண்டுகளுக்கும் மேலான தலைவரான ஹசன் நஸ்ரல்லாவை சனிக்கிழமையன்று பெய்ரூட்டில் ஒரு பாரிய வான்வழித் தாக்குதலை மேற்கொண்டு தாக்கியது.
இஸ்ரேலின் இதன் ஆரம்ப நகர்வாக லெபனானுக்குள் பூபி-சிக்கி பேஜர்கள் மற்றும் ரேடியோக்கள் வெடிக்கவைத்து அச்சத்தை விதைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |