அமெரிக்காவின் தாக்குதலுக்குப் பதிலடி! ஈரான் அதிரடித் தாக்குதல்
அமெரிக்கா, ஈரானின் Qeshm தீவில் ஏவுகணை ஏவுதளத்தைத் தாக்கியதைத் தொடர்ந்து, ஈரான் வளைகுடா நாடுகளான குவைத் மற்றும் பஹ்ரைன் மீது புதிய தாக்குதல்களை நடத்தியுள்ளது.
அமெரிக்க இராணுவம் பயன்படுத்தும் விமானப்படைத் தளத்தை இலக்காகக் கொண்டு ஈரான் ட்ரோன் தாக்குதல்களை நடத்தியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈரான் ட்ரோன் தாக்குதல்
இதனை அடுத்தே குவைத் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது இதன்போது, குவைத் தனது வான் பாதுகாப்பு அமைப்புகளைச் செயல்படுத்தியுள்ளது.
இதேவேளை, ஈரானின் தாக்குதலை முறியடித்ததாக பஹ்ரைன் தெரிவித்துள்ளது. கடந்த ஆறு நாட்களில் நான்கு முறை ஈரானிய தாக்குதல்களை, பஹ்ரைன் எதிர்கொண்டுள்ளது.

முன்னதாக, பஹ்ரைனில் உள்ள அமெரிக்க ரேடார் நிலையம் மீது ஈரான் தாக்குதல் நடத்தியதற்குப் பதிலடியாக Qeshm தீவில் தாக்குதல் நடத்தியதாக அமெரிக்கா கூறியுள்ளது.
இந்த நிலையில், அமெரிக்காவின் நடவடிக்கைகளைத் தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும், அமெரிக்கா மற்றும் அதன் ஆதரவாளர்கள் தவறான நடவடிக்கையில் ஈடுபட்டால் இன்னும் கடுமையான பதிலடி வழங்கப்படும் என்றும், ஈரானின் இராணுவத் தளபதி மேஜர் ஜெனரல் அமீர் ஹடாமி, எச்சரித்துள்ளார்.