செங்கடல் பகுதியில் பதற்றம்: ஹவுதி ஏவுகணைகளை சுட்டு வீழ்த்திய அமெரிக்கா
ஹவுதிகளால் ஏவப்பட்ட ஏவுகணையை வெற்றிகரமாக தடுத்து நிறுத்தியுள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
யேமனில் ஹவுதி கிளர்ச்சியாளர்களால் அமெரிக்க நாசகாரக் கப்பலை நோக்கி ஏவப்பட்ட ஏவுகணையை தமது போர் விமானம் சுட்டு வீழ்த்தியதாக அமெரிக்க இராணுவம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக செங்கடல் பகுதியில் பதற்றம் நீடித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கப்பல் போக்குவரத்து பாரிய அச்சுறுத்தல்
செங்கடலில் செல்லும் கப்பல்களை இலக்கு வைத்து ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் நடத்தும் தாக்குதல்களால் செங்கடல் ஊடான கப்பல் போக்குவரத்து பாரிய அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளது.
காசா பகுதியில் இஸ்ரேலின் தாக்குதல்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், யேமனின்ஹவுதி கிளர்ச்சியாளர்கள் செங்கடலில் பயணிக்கும் வணிகக் கப்பல்களை இலக்கு வைத்து தாக்கி வருகின்றனர்.
இதன் காரணமாக, அந்த தாக்குதல்களை தடுக்கும் வகையில் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் மீது அமெரிக்கா மற்றும் பிரித்தானியா தலைமையிலான கூட்டு இராணுவக் குழு தாக்குதல் நடத்தி வருகின்றது.
அமெரிக்க ஜனாதிபதி கடும் எச்சரிக்கை
செங்கடலில் செல்லும் கப்பல்கள் மீது தாக்குதல்கள் நடத்தப்படுவது நிறுத்தப்படாவிட்டால் ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் மீதான தாக்குதல்கள் தொடரும் என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
செங்கடலில் நிலைகொண்டிருந்த அமெரிக்க கப்பல்களை குறிவைத்து ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஏவுகணையை செலுத்தியதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
எனினும், குறித்த ஏவுகணையை அமெரிக்க போர் விமானம் தாக்கி அழித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

பதினாறாவது மே பதினெட்டு 3 மணி நேரம் முன்

சிறந்த அப்பாவுக்கு உதாரணமாக திகழும் ஆண் ராசியினர் இவர்கள் தானாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan

ஆபரேஷன் சிந்தூர்... தாக்குதலுக்கு முன்பே பாகிஸ்தானுக்கு தெரியும்: வெளிவிவகார அமைச்சர் கருத்தால் குழப்பம் News Lankasri
