இந்தியா - பங்களாதேஷ் எல்லை நகரை கைப்பற்றிய மியன்மார் ஆயுதக் குழு: தொடரும் பதட்டநிலை
மியான்மரில் பழங்குடியின ஆயுதக் குழு இந்தியா மற்றும் பங்களாதேஷ் எல்லையில் அமைந்துள்ள ஒரு நகரத்தை தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளதாக சர்வதேச ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
அரக்கான் இராணுவம் (AA) என்று அழைக்கப்படும் குழு, ஞாயிற்றுக்கிழமை இரவு, அண்டை நாடுகளுடன் வர்த்தகம் செய்வதற்கு முக்கியமாக இருக்கும் கலடன் ஆற்றின் துறைமுக நகரமான பலேத்வாவைக் கைப்பற்றியதாக தெரிவிக்கப்படுகின்றது.
மியான்மர் பழங்குடியின ஆயுதக்குழுவின் செய்தித் தொடர்பாளர் இது தொடர்பில் கருத்துத் தெரிவிக்கையில்,
எல்லை பிரச்சினைகள்
எல்லை ஸ்திரத்தன்மை பிரச்சினைகள் தொடர்பாக, அண்டை நாடுகளுடன் நாங்கள் சிறந்த முறையில் ஒத்துழைப்போம் என்று ஆயுதக்குழுவின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
எனினும் அப்பகுதியில் நிர்வாகத்தையும் சட்ட அமலாக்கத்தையும் அவர்கள் கையகப்படுத்துவார்கள் என்றும் செய்தித் தொடர்பாளர் குறிப்பிட்டுள்ளார்.
மியான்மர் பல முனைகளில் கிளர்ச்சியில் உள்ளது, அங்கு ஜனநாயக சார்பு இணை அரசாங்கத்தால் ஆதரிக்கப்படும் இராணுவ எதிர்ப்பு குழுக்கள் பல இராணுவ நிலைகள் மற்றும் நகரங்களின் கட்டுப்பாட்டைக் கைப்பற்றியுள்ளன.
ஆட்சிக்கவிழ்ப்பு
மியான்மரில் ஆங் சான் சூச்சி தலைமையிலான அரசை கவிழ்த்து 2021 இல் இராணுவம் ஆட்சியை கைப்பற்றியது.
ஆட்சிக்கவிழ்ப்பு நடத்தியதில் இருந்து இராணுவ ஆட்சி எதிர்கொள்ளும் மிகப்பெரிய சவாலா இது உள்ளது.
மியான்மரில் ஆயுதமேந்திய இனக்குழு ஒன்று இந்தியா மற்றும் பங்களாதேஷ் எல்லையில் அமைந்துள்ள ஒரு நகரத்தை தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |