அமெரிக்க பாதுகாப்பு தகவலாளருக்கு ரஷ்யாவின் குடியுரிமை
அமெரிக்க உளவுத்துறையின் விரிவான கண்காணிப்பு நடவடிக்கைகளை கசியவிட்ட முன்னாள் அமெரிக்க உளவுத்துறை ஒப்பந்ததாரர் எட்வர்ட் ஸ்னோடனுக்கு ரஷ்யாவின் குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது.
இதற்கான ஆணையில் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் திங்கட்கிழமை கையெழுத்திட்டார்.
தேசிய பாதுகாப்பு முகமை திட்டம்
39 வயதான ஸ்னோடன், 2013 ஆம் ஆண்டில் மில்லியன் கணக்கான அமெரிக்கர்களை பாதிக்கும் தேசிய பாதுகாப்பு முகமை (NSA) திட்டத்தை அம்பலப்படுத்தியதிலிருந்து, ரஷ்யாவில் வாழ்ந்து வருகின்றார்.
இந்த நிலையில் அமெரிக்காவில் உளவு பார்த்த குற்றச்சாட்டை எதிர்கொள்ளும் ஸ்னோடன், ரஷ்யாவின் இன்றைய அறிவிப்பு குறித்து பகிரங்கமாக கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை.
இதேவேளை தாம் மீண்டும் அமெரிக்கா திரும்பினால் நியாயமான விசாரணை இடம்பெறாது என்று ஸ்னோவ்டென் 2020, செப்டெம்பரில் தெரிவித்திருந்தார்.





ஜீ தமிழின் நினைத்தாலே இனிக்கும் சீரியலின் கடைசிநாள் படப்பிடிப்பு முடிந்தது... புகைப்படங்கள் இதோ Cineulagam

உலகில் பரவும் மர்ம வியாதி... தொற்றுநோய் அச்சுறுத்தலை அறிவித்த நாடு: அதிகரிக்கும் எண்ணிக்கை News Lankasri
