ரஷ்ய பாடசாலையில் பயங்கர துப்பாக்கிச்சூடு: 15 பேர் உயிரிழப்பு - 24 பேர் காயம்
மத்திய ரஷ்யாவிலுள்ள பாடசாலை ஒன்றில் துப்பாக்கிதாரியொருவர் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் 15 பேர் பலியாகியுள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதன்போது இந்த தாக்குலில் 24 பேர் காயமடைந்துள்ளதாகவும் ரஷ்ய அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
துப்பாக்கிப்பிரயோகத்திற்கான காரணம்
இந்த சம்பவத்தில் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்தவர்களே பலியாகியுள்ளதாக கூறப்படுகின்றது.
துப்பாக்கிப் பிரயோகத்திற்கான காரணம் இதுவரை வெளிவராத நிலையில்,துப்பாக்கி ஏந்திய நபர் தன்னைத் தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டதாகவும் கூறப்படுகின்றது.
இதற்கமைய, ரஷ்ய அதிகாரிகளின் தகவலின் படி , இரண்டு பாதுகாப்பு காவலர்கள் மற்றும் இரண்டு ஆசிரியர்கள் உட்பட 11 குழந்தைகள் மற்றும் நான்கு பெரியவர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.மேலும் காயமடைந்த 24 பேரில் இருவரைத் தவிர மற்ற அனைவரும் குழந்தைகள் எனவும் தெரிவித்துள்ளனர்.

அஜித் குமார் மரண வழக்கில் கைதான 5 காவலர்களையும் 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவு News Lankasri
