கடும் நெருக்கடியில் இலங்கை - ரணிலுடன் பேசிய அமெரிக்க இராஜாங்கச் செயலாளர்
அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் அன்டனி ஜே.பிளிங்கன் இன்று பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுடன் கலந்துரையாடியுள்ளார்.
இலங்கையின் தற்போதைய பொருளாதார மற்றும் அரசியல் சவால்கள் குறித்து இருவரும் கலந்துரையாடியதாக அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் பேச்சாளர் நெட் பிரைஸ் தெரிவித்தார்.
இந்த சவாலான நேரத்தில் இலங்கை மக்களுக்கு அமெரிக்காவின் அர்ப்பணிப்பு, ஜனநாயக ஆட்சி மற்றும் மனித உரிமைகள் உட்பட அனைத்து இலங்கையர்களின் கவலைகளை நிவர்த்தி செய்யும் சீர்திருத்தங்களை ஆதரிப்பதன் முக்கியத்துவத்தையும் செயலாளர் உறுதிப்படுத்தினார்.
இதேவேளை, சர்வதேச நாணய நிதியத்துடன் நடைபெற்று வரும் கலந்துரையாடல்களின் தற்போதைய நிலை குறித்து அன்டனி பிளிங்கனுடனான தனது தொலைபேசி உரையாடலின் போது பிரதமர் ரணில் விக்ரமசிங்க விளக்கமளித்ததாக பிரதமரின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
ஜோ பைடனுக்கு வாழ்த்து கூறிய ரணில்
அமெரிக்காவுடன் நெருக்கமாகச் செயற்படுவதற்கும் இரு நாடுகளுக்கு இடையிலான உறவுகளை மேலும் வலுப்படுத்துவதற்கும் இலங்கை எதிர்பார்த்துள்ளதாக பிரதமர் ரணில் மேலும் தெரிவித்தார்.
சர்வதேச நாணய நிதியத்தின் பேச்சுவார்த்தைகள் முடிவடைந்த பின்னர் இலங்கைக்கு ஆதரவளிப்பதற்கும் இலங்கையில் முதலீட்டை ஊக்குவிப்பதற்கும் அன்டனி ஜே.பிளிங்கன் ஒப்புக்கொண்டுள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனுக்கு தனது வாழ்த்துக்களை தெரிவிக்குமாறு பிரதமர் ரணில் விக்ரமசிங்க, அமெரிக்க இராஜாங்க செயலாளர் அன்டனி பிளின்கனிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலில் விழிப்படைந்த சிறுபான்மை சமூகம் 3 மணி நேரம் முன்

இந்த ராசியில் பிறந்தவர்கள் புலி போல் பதுங்கி இருந்து வேலைப்பார்ப்பார்களாம்.. நீங்க என்ன ராசி? Manithan

மிக மோசமான அணு ஆயுதப் போராக வெடித்திருக்கும்... தடுத்து நிறுத்தினேன்: ட்ரம்ப் பேச்சால் சர்ச்சை News Lankasri

இந்தியாவால் கொல்லப்பட்ட பயங்கரவாதிகள் இறுதிச்சடங்கில் கவனம் ஈர்த்த நபர்... யாரிந்த அப்துல் ரவூஃப் News Lankasri
