வீழ்ச்சியிலிருந்து இலங்கை மீண்டெழுவதற்கு 18 மாதங்கள் ஆகும்! ரணில் தகவல்

Dollar to Sri Lankan Rupee Ranil Wickremesinghe China India Dollars
By Rakesh Jun 13, 2022 10:32 AM GMT
Report

தற்போதைய நெருக்கடியிலிருந்து இலங்கை மீண்டு, நாட்டின் பொருளாதாரம் உறுதித்தன்மைக்கு வருவதற்கு சுமார் 18 மாதங்கள் ஆகும்.

இலங்கை தற்போது பெரும் டொலர் நெருக்கடி மற்றும் கடன் பிரச்சினையை எதிர்கொண்டுள்ளது என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

வீழ்ச்சியிலிருந்து இலங்கை மீண்டெழுவதற்கு 18 மாதங்கள் ஆகும்! ரணில் தகவல் | All Politicians Must United To Recover Srilanka

வெளிநாட்டுக் கடனை மறுசீரமைக்கும் நடவடிக்கையில் அரசு ஈடுபட்டுள்ளது. ஆனால் அதிக எண்ணிக்கையிலான தனியார் கடனாளிகள் காரணமாக சிரமங்களை அரசு எதிர்கொள்கின்றது என்றும் அவர் கூறினார்.

இந்திய ஊடக வலையமைப்பான WION சேவைக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பாக பிரதமர் மேலும் தெரிவிக்கையில்,

தற்போதைய பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடிக்குத் தீர்வு காண நாட்டில் உள்ள அனைத்து அரசியல்வாதிகளும் ஒன்றிணைய வேண்டும்.

வீழ்ச்சியிலிருந்து இலங்கை மீண்டெழுவதற்கு 18 மாதங்கள் ஆகும்! ரணில் தகவல் | All Politicians Must United To Recover Srilanka

கடன் உதவி தொடர்பில் அரசு தற்போது சர்வதேச நாணய நிதியத்துடன் கலந்துரையாடி வருகின்றது.

அரசு சர்வதேச நாணய நிதியத்திடம் கடன் உதவி கோரும் அதேவேளையில், தற்போது நிலவும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண நன்கொடை வழங்கும் நிறுவனங்கள் மற்றும் நட்பு நாடுகளுடன் பேச்சு நடத்தி வருகின்றது.

இலங்கையின் கடன் நிலையான மட்டத்தில் இருக்கும் என சர்வதேச நாணய நிதியம் எதிர்பார்க்கின்றது. எனவே, பல மாற்றங்கள் செய்யப்பட வேண்டும்.

ஐக்கிய தேசியக் கட்சியால் முன்மொழியப்பட்டவாறு அரசு 2020இல் சர்வதேச நாணய நிதியத்தை அணுகியிருக்க வேண்டும். ஐக்கிய நாடுகள் சபையால் சுட்டிக்காட்டியபடி, இலங்கை முழுக்க முழுக்க அவசரநிலையை எதிர்கொள்கின்றது.

எனவே, உலக வல்லரசுகளின் ஆதரவு எமக்கு தேவை. ஏற்றுமதி சார்ந்த வணிக மாதிரியை அறிமுகப்படுத்துவதன் மூலம் பல மாற்றங்கள் செய்யப்பட வேண்டும்.

இலங்கையைப் போட்டித்தன்மை வாய்ந்த பொருளாதாரமாக மாற்ற வேண்டும் எனக் கூறினார்.

தனது இடைக்கால வரவு - செலவுத் திட்டம் தொடர்பில் பிரதமர் கருத்து தெரிவிக்கையில்,

கடனை மீளச் செலுத்துவதற்கும், அத்தியாவசியப் பொருள்களை இறக்குமதி செய்வதற்கும், நலிவடைந்த மக்களுக்கு நலன்புரி உதவிகளை வழங்குவதற்கும், அரசின் வருவாயை அதிகரிப்பதற்காக வரி முறையை சீர்திருத்துவதற்கும் கூடுதல் நிதியை வழங்க வரவு - செலவுத் திட்டத்தில் முன்மொழியப்படும். என்று குறிப்பிட்டார்.

மேலும் கருத்து தெரிவிக்கையில்,

இலங்கை மீண்டும் உயர் நடுத்தர வருமானம் பெறும் நாடாக மாற வேண்டும் என்பதால் நிதி ஒழுக்கத்தை உறுதி செய்வதில் நான் கவனம் செலுத்துகின்றேன்.

பொருளாதார மறுசீரமைப்புடன் நாட்டை உறுதிப்படுத்தும் அரசியல் சீர்திருத்தங்களை அரசு மேற்கொண்டுள்ளது.

அரசமைப்பின் 21ஆவது திருத்தம் போன்ற சில அரசியல் சீர்திருத்தங்கள் தொடர்பில் இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது.

மிகவும் தேவையான சீர்திருத்தங்களுக்கு அழுத்தம் கொடுக்கின்றேன். நாடாளுமன்றத்தில் அனைத்துத் தரப்பினரின் ஆதரவையும் நாடுகின்றேன் என்றார்.

வெளிக் காரணிகள் குறித்து பிரதமர் கருத்து தெரிவிக்கையில்,

சீனா இலங்கைக்கு கடன் ஏற்பாடுகள் மூலம் உதவி செய்து வருகின்றது. ஆனால், இந்தியா பல முனைகளில் அரசுக்குப் பெருமளவில் ஆதரவளித்து வருகின்றது.

வீழ்ச்சியிலிருந்து இலங்கை மீண்டெழுவதற்கு 18 மாதங்கள் ஆகும்! ரணில் தகவல் | All Politicians Must United To Recover Srilanka

இலங்கை இந்தியாவுடன் நெருக்கமாகப் பணியாற்றி வருகின்றது. இந்திய அரச அதிகாரிகள் பலருடன் நான் பேச்சு நடத்தி வருகின்றேன்.

இலங்கை மக்களுக்கு ஆதரவளிப்பதும் பொருளாதாரத்தை மறுசீரமைப்பதும் காலத்தின் தேவையாகும்.

கூடிய விரைவில் நாட்டை உறுதியான நிலைக்குக் கொண்டு வருவதற்கு எத்தகைய தியாகத்தையும் செய்ய நான் தயாராக இருக்கின்றேன். எனவே, அரசியல் களத்தில் இரு தரப்பிலிருந்தும் எனக்கு ஆதரவு தேவை"  எனக் குறிப்பிட்டுள்ளார்.

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இலங்கை, Münster, Germany, கிளிநொச்சி

26 Jul, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Möhlin, Switzerland

24 Jul, 2026
மரண அறிவித்தல்

மாவிட்டபுரம், Drensteinfurt, Germany

24 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொள்ளுப்பிட்டி

09 Aug, 2025
மரண அறிவித்தல்

மீசாலை, கொடிகாமம், வெள்ளவத்தை

26 Jul, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், மன்னார்

28 Jul, 2015
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Herzogenbuchsee, Switzerland

30 Jul, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், புங்குடுதீவு, India, Lausanne, Switzerland

09 Aug, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 3ம் வட்டாரம், Billund, Denmark

26 Jul, 2018
மரண அறிவித்தல்

கோப்பாய் வடக்கு, Scarborough, Canada

25 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Farnborough, United Kingdom

29 Jul, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொட்டாஞ்சேனை

28 Jul, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், கொழும்பு

28 Jul, 2018
மரண அறிவித்தல்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

28 Jul, 2019
12ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

29 Jul, 2014
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூதூர், மட்டக்களப்பு

28 Jul, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சிட்னி, Australia

28 Jul, 2017
மரண அறிவித்தல்

இலந்தைக்காடு, யாழ்ப்பாணம், Hamburg, Germany

19 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, சூரிச், Switzerland

30 Jul, 2020
11ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Lausanne, Switzerland

27 Jul, 2015
8ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, மானிப்பாய், London, United Kingdom

25 Jul, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Ontario, Canada, Savigny-le-Temple, France

24 Jul, 2021
மரண அறிவித்தல்

ஏழாலை, யாழ்ப்பாணம், அரியாலை, London, United Kingdom

21 Jul, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US