கொழும்பில் புதிய நகர்வு! இலங்கைக்காக சந்தித்துக்கொண்ட அமெரிக்காவும் சீனாவும்
இலங்கைக்காக அமெரிக்காவும் சீனாவும்
இலங்கைக்கு ஆதரவளிப்பதற்கான வழிகள் குறித்து அமெரிக்காவும் சீனாவும் இன்று பேச்சுவார்த்தை நடத்தியுள்ளன.
இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங், இலங்கைக்கான சீனத் தூதுவர் குய் சென்ஹொங்கை இன்று கொழும்பில் உள்ள சீனத் தூதரகத்தில் சந்தித்தார்.
நட்பு ரீதியான பேச்சு
Met with PRC Ambassador Qi Zhenhong about the political and economic situation in SL. Interesting to share ideas about trade, investment, and development, as well as ways to support Sri Lankan efforts to ensure political stability & economic growth. pic.twitter.com/MM6GDhKV5F
— Ambassador Julie Chung (@USAmbSL) June 13, 2022
பரஸ்பர ஆர்வமுள்ள பரந்த தலைப்புகளில் அவர்கள் நட்பு ரீதியாக கலந்துரையாடியதாக சீன தூதரகம் தெரிவித்துள்ளது.
இலங்கையின் தற்போதைய நெருக்கடிகளை சமாளிக்க சீனாவும் அமெரிக்காவும் இணைந்து பணியாற்ற முடியும் என்று தூதரகம் தெரிவித்துள்ளது.
The US is promoting food security & economic opportunity in Sri Lanka. Our $27 million contribution to SL’s dairy industry will benefit 80,000 Sri Lankans by equipping farmers with the skills & resources they need to increase productivity.https://t.co/kNO8gA1xNU pic.twitter.com/qME21SMvza
— Ambassador Julie Chung (@USAmbSL) June 13, 2022
பொருளாதார நிலைமைகள் தொடர்பில் பேச்சு
இதேவேளை, சீனத் தூதுவரைச் சந்தித்து இலங்கையின் அரசியல் மற்றும் பொருளாதார நிலைமைகள் குறித்து கலந்துரையாடியதாக அமெரிக்கத் தூதுவர் ட்வீட் செய்துள்ளார்.
வர்த்தகம், முதலீடு மற்றும் அபிவிருத்தி, அத்துடன் அரசியல் ஸ்திரத்தன்மை மற்றும் பொருளாதார வளர்ச்சியை உறுதி செய்வதற்கான இலங்கை முயற்சிகளுக்கு ஆதரவளிக்கும் வழிகள் குறித்து இதன்போது பேசப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
சீனாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான உறவு பாதிப்படைந்துள்ள நிலையில் இலங்கை தொடர்பான இந்த சந்திப்பு முக்கியத்துவம் பெறுகிறது.