இன்னும் சில மணிநேரங்களில் ஹோர்முஸில் அதிரடியாக களமிறங்கும் அமெரிக்க கடற்படை!
இன்னும் சில மணிநேரங்களில் ஈரானிய கப்பல்கள் மீது முழுமையான முற்றுகையை அமெரிக்க கடற்படை நடைமுறைபடுத்தும் என அமெரிக்கா அறிவித்துள்ளது.
பிற நாடுகளுக்கு அனுமதி..
அமெரிக்க மத்திய புலனாய்வு வெளியிட்டுள்ள தகவலின் படி, அமெரிக்க நேரப்படி, ஏப்ரல் 13ஆம் திகதி காலை 10 மணி முதல் இந்த முற்றுகை ஆரம்பமாகவுள்ளது. (தற்போது அமெரிக்காவில் நேரம் - காலை 06:55)

மத்திய புலனாய்வின் அறிவிப்பில், ஈரானிய துறைமுகங்களுக்கு முழுமையான கடற்படை முற்றுகையை அமெரிக்கப் படைகள் நடைமுறைபடுத்த தொடங்கும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
அதே நேரத்தில் ஈரானுக்குச் செல்லும் அல்லது ஈரானிலிருந்து வரும் கப்பல்களைத் தவிர மற்ற சர்வதேச கப்பல்கள் ஹோர்முஸ் நீரிரணை வழியாகத் தொடர்ந்து செல்ல அனுமதிக்கப்படும் என்றும் மத்திய புலனாய்வு தெரிவித்துள்ளது.
YOU MAY LIKE THIS VIDEO