அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகள்: கடற்படை முற்றுகை
அமெரிக்கா விதித்துள்ள கடுமையான பொருளாதாரத் தடைகள் மற்றும் அதன் சமீபத்திய கடற்படை முற்றுகை ஆகியவை ஈரானின் பொருளாதாரத்தை பெருமளவில் பாதித்துள்ளது.
இருந்த போதிலும், வொஷிங்டனுடன் நடைபெற்று வரும் பேச்சுவார்த்தைகளில் தெஹ்ரானின் உறுதியை அது எந்த வகையிலும் குலைக்காது என்று தெஹ்ரானின் மத்திய கிழக்கு மூலோபாய ஆய்விற்கான மையத்தின் மூத்த ஆராய்ச்சி ஆய்வாளர் அபாஸ் அஸ்லானி தெரிவித்துள்ளார்.
தற்போதைய சூழ்நிலையால் ஈரானின் சாதாரண குடிமக்களின் பொருளாதாரத் துயரங்களும் இன்னல்களும் கணிசமாக அதிகரித்துள்ள போதிலும், நாட்டின் பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டுள்ளதால், இந்த இக்கட்டான சூழ்நிலையை மக்களால் ஓரளவு தாங்கிக் கொள்ள முடிகிறது என்று குறிப்பிட்டுள்ளார்.
17 ஆண்டுகள் கடந்தும் நீதி கிடைக்கவில்லை - குற்றவாளிகள் கூண்டில் நிறுத்தப்பட வேண்டும்: முள்ளிவாய்க்காலில் முழக்கம்!
பொருளாதாரப் பிரச்சினை
கடுமையான பொருளாதார நெருக்கடி மக்களின் அன்றாட வாழ்க்கையைப் பாதித்திருந்தாலும், ஈரான் இதுவரை இந்த சவால்களைத் தாங்கி உயிர்வாழ முடிந்துள்ளது என்றும் அவர் கூறினார்.
ஈரான் நாட்டு மக்களின் சகிப்புத்தன்மையையும் உறுதியையும் உடைப்பதே அமெரிக்காவின் முக்கிய நோக்கம் என்று அஸ்லானி சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டின் தலைவர்கள் பேச்சுவார்த்தை மேசையில் தங்களின் நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ள வேண்டும் அல்லது அமெரிக்காவிடம் சரணடைய வேண்டும் என்பதற்காக, பொதுமக்கள் மூலமாக ஈரான் அரசுக்கு அழுத்தம் கொடுக்க அமெரிக்கா முயற்சிக்கிறது.

ஆனால், போர் அல்லது நாட்டின் பாதுகாப்பற்ற சூழ்நிலையின் போது, மக்கள் பொதுவாக பொருளாதார நிலையை விட நாட்டின் பாதுகாப்பிற்கே முதலிடம் கொடுப்பார்கள் என்பதால் அமெரிக்காவின் இந்த திட்டம் பலிக்கவில்லை என்று அவர் விளக்கினார்.
பொருளாதாரம் முக்கியமற்றது என்று இதற்குப் பொருள் அல்ல எனக் குறிப்பிட்ட அவர், தற்போதைய நிலையில் ஈரானியர்களின் முதன்மை முன்னுரிமை இந்த நெருக்கடியில் இருந்து தப்பித்து உயிர் வாழ்வதே என்றும், பொருளாதாரப் பிரச்சினைகள் அனைத்தும் "பின்னர்" சரி செய்யப்படும் என்றும் அஸ்லானி மேலும் தெரிவித்துள்ளார்.