சவுதி அரேபியா மீதான முக்கிய தடையை நீக்க அமெரிக்கா தீர்மானம்
சவுதி அரேபியாவுக்கு (Saudi Arabia) ஆபத்தான ஆயுதங்களை விற்பதற்கு அமெரிக்காவில் விதிக்கப்பட்டிருந்த தடையை அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் (Joe Biden) நீக்க தீர்மானித்துள்ளார்.
கடந்த மூன்று வருடங்களாக அமெரிக்காவில் சவுதி அரேபியா மீது விதிக்கப்பட்டிருந்த இந்த முக்கிய தடை நீக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, அமெரிக்க வெளியுறவு துறை, சவுதி அரேபியாவுக்கு காற்று முதல் தரை வரை எனப்படும் (Air-to-Ground) ஆயுதங்களை மாற்றுவதற்கான தடை சிலவற்றை நீக்க தீர்மானித்துள்ளது.

சுவிட்சர்லாந்து விளையாட்டு விழாவில் வெளியேற்றப்பட்ட விடுதலைப் புலிகள் அமைப்பின் சுவிஸ் கிளை பொறுப்பாளர்
ஆயுத விற்பனை தடை
2021ஆம் ஆண்டில், சவுதி அரேபியா ஏமனின் ஹவுத்தி கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக மேற்கொண்ட போரில் சாதாரண பொதுமக்கள் பலர் உயிரிழந்தனர்.
இந்நிலையில், இந்த நடவடிக்கையை எதிர்த்து அமெரிக்கா சவுதிக்கு ஆயுதங்களை விற்பனை செய்ய தடை விதித்தது.
இதன் பின்னர், 2022 ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் சபையுடன், ஏமன் மற்றும் சவுதியில் ஒரு ஒப்பந்தம் எட்டப்பட்டதையடுத்து அங்கு மேற்கொண்ட வான்வழித் தாக்குதலை சவுதி நிறுத்தியது.
மேலும், முன்னதாக விடுக்கப்பட்டிருந்த இந்த தடையானது, இஸ்ரேல் மற்றும் ஹமாஸில் போர் தொடங்கியதில் இருந்து குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, அமெரிக்க சட்டத்தின் படி, முக்கிய சர்வதேச ஆயுத ஒப்பந்தங்கள் இறுதி செய்யப்படுவதற்கு முன்பு நாடாளுமன்ற உறுப்பினர்களால் மதிப்பாய்வு செய்யப்பட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |





நிலா வாழ்க்கையில் அடுத்து ஏற்படப்போகும் பெரிய சிக்கல், சோழன் என்ன செய்வார்... அய்யனார் துணை அடுத்த வார கதைக்களம் Cineulagam

Netflix-ல் அதிகம் பார்க்கப்பட்ட தமிழ் திரைப்படம்.. விஜய், அஜித், ரஜினிக்கே முதல் இடம் இல்லையா Cineulagam

விஜயாவை வெறிக்கொண்டு அடிக்க வந்த பெண், மீனா செய்த காரியம்.. சிறகடிக்க ஆசை சீரியல் பரபரப்பு கதைக்களம் Cineulagam

5 போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன... ஆபரேஷன் சிந்தூர் தொடர்பில் ட்ரம்ப் மீண்டும் அதிரடி News Lankasri

Numerology: இந்த தேதியில் பிறந்தவங்க ஓவர் நைட்டில் கோடீஸ்வரர் ஆவார்களாம்.. உங்க தேதியும் இருக்கா? Manithan

ஜேர்மனி பிரித்தானியா ஒப்பந்தம் கையெழுத்து: சிறிது நேரத்தில் ரஷ்யாவிலிருந்து வந்த எச்சரிக்கை News Lankasri
