அமெரிக்க ஜனாதிபதி தேர்தல்: போட்டியிலிருந்து விலகினார் நிக்கி ஹேலி
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலுக்கான குடியரசுக் கட்சி வேட்பாளருக்கான போட்டியிலிருந்து நிக்கி ஹேலி விலகியுள்ளார்.
இது தொடர்பிலான அறிவிப்பை தென் கரோலினா மாநிலத்தின் தலைநகர் சார்ள்ஸ்டனில் இன்று வெளியிட்டுள்ளார்.
இந்நிலையில், குடியரசுக் கட்சி வேட்பாளராக தனியொரு வேட்பாளராக முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் போட்டியாளதாக தெரிவிக்கப்படுகிறது.
அமெரிக்க பொதுத் தேர்தல்
மேலும், இதுவரை நடைபெற்ற குடியரசுக் கட்சியின் உட்கட்சித் தேர்தல்களில் வொஷிங்டன் டி.சி மற்றும் வேர்மண்ட் மாநிலத்தில் மாத்திரமே நிக்கி ஹேலி வெற்றியீட்டிய நிலையில் அவர் இப்போட்டியிலிருந்து விலகுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ட்ரம்ப் மற்றும் ஜோ பைடன் ஆகியோரின் தொடர்ச்சியான வெற்றிகளுக்குப் பிறகு தங்கள் கட்சிகளுக்கு அதிகாரப்பூர்வமற்ற கட்டளையை எடுத்துக்கொள்வதன் மூலம், தனது பிரச்சாரத்தை முடித்துக்கொண்ட ஹேலியின் முடிவு பொதுத் தேர்தலைத் திறம்பட ஆரம்பித்துள்ளதாக அமெரிக்க அரசியல் ஆய்வாளர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.
"அமெரிக்கர்கள் தங்கள் குரல்களைக் வெளிப்படுத்த வேண்டும் என்று நான் விரும்புகிறேன். நான் அதைச் செய்தேன்.
எனக்கு எந்த வருத்தமும் இல்லை. நான் இனி வேட்பாளராக இருக்க மாட்டேன் என்றாலும், நான் நம்பும் விடயங்களுக்கு எனது குரலைப் பயன்படுத்துவதை நிறுத்த மாட்டேன்." என நிக்கி ஹேலி வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
அமெரிக்க ஒப்பந்தத்தை மறுத்தால் ஜெலென்ஸ்கி கொல்லப்படலாம்... ரஷ்யாவில் இருந்து கசிந்த தகவல் News Lankasri
பிரித்தானியாவில் பிறந்த பிள்ளைகளும் நாடுகடத்தப்படலாம்: அடிமடியில் கை வைக்கும் உள்துறைச் செயலரின் திட்டம் News Lankasri