13 வயது சிறுவனுக்கு அமெரிக்க ஜனாதிபதி வழங்கிய முக்கிய பதவி
கடந்த செவ்வாயன்று நடைபெற்ற காங்கிரஸ் கூட்டத்தில் உரையாற்றிய, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், அமெரிக்க இரகசிய சேவையின் புதிய உறுப்பினராக, மூளை புற்றுநோயால் பாதிக்கப்பட்ட 13 வயதான சிறுவனை அறிமுகப்படுத்தியுள்ளார்.
ஹூஸ்டன் பொலிஸ் சீருடையில், பிரதிநிதிகள் சபையின் பார்வையாளர் பகுதியில் தனது தந்தையுடன் அமர்ந்திருந்த சிறுவன் DJ டேனியல் (DJ Danie), எப்போதும் ஒரு பொலிஸ் அதிகாரியாக வேண்டும் என்று கனவு கண்டதாக ட்ரம்ப், இதன்போது கூறியுள்ளார்.
ஐந்து மாதங்களே வாழ முடியும்..
2018 ஆம் ஆண்டில் அவருக்கு Send புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டது.
எனினும் மருத்துவர்கள் அவருக்கு அதிகபட்சமாக ஐந்து மாதங்களே வாழ முடியும் என்று சான்றளித்தனர்.
“Tonight, DJ Daniel, we are going to do you the biggest honor of them all. I am asking our new Secret Service director, Sean Curran, to officially make you an agent of the United States Secret Service.” –President Donald J. Trump 🇺🇸 pic.twitter.com/JG38AUYMqj
— The White House (@WhiteHouse) March 5, 2025
இது ஆறு ஆண்டுகளுக்கு முன்னர் வழங்கப்பட்ட சான்று என்று ட்ரம்ப் கூறிய போது அறையிலிருந்து பலத்த கைதட்டல் எழுப்பப்பட்டது.
இந்தநிலையில் இன்றிரவு, DJ ஐ எங்கள் புதிய இரகசிய சேவை இயக்குனர் சீன் கரனிடம், உங்களை அமெரிக்க இரகசிய சேவையின் முகவராக அதிகார பூர்வமாக மாற்றுமாறு கேட்டுக்கொள்கிறேன் என்று ட்ரம்ப் குறிப்பிட்டார்.
குறிப்பாக, அவரது தந்தையும் தனது மகனின் கனவுகளை நனவாக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்தாக கூறப்படுகிறது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |