சர்வதேசத்தில் அதிரடி காட்டி வரும் அமெரிக்கா.. அம்பலமான ட்ரம்பின் திட்டம்!
வெனிசுலா, எண்ணெய் ஏற்றிச் செல்லும் மேலும் ஆறு கப்பல்களை இடைமறிக்க அமெரிக்கா திட்டமிட்டு வருவதாக சர்வதேச ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.
அமெரிக்கா இந்த வாரம் வெனிசுலாவின் ஒரு எண்ணெய் தாங்கி கப்பலை கைப்பற்றியதைத் தொடர்ந்து, இத்திட்டத்தை தீட்டி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவ்வாறு செய்வதன் மூலம், வெனிசுலாவின் ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ மீது அழுத்தம் அதிகரிக்கும் என்றும் இந்த விடயத்தை நன்கு அறிந்த ஆறு வட்டாரங்கள் தெரிவித்ததாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
பதவி விலக அழுத்தம்
கடந்த 2019ஆம் ஆண்டு முதல் அமெரிக்கத் தடைகளின் கீழ் உள்ள வெனிசுலாவிலிருந்து வந்த எண்ணெய் சரக்கு அல்லது தாங்கி கப்பலை அமெரிக்கா கைப்பற்றியது இதுவே முதல் தடவையாகும்.

இது அமெரிக்கா, தொடர்ந்து வெனிசுலாவின் ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ பதவி விலக வேண்டும் என ட்ரம்ப் தெரிவித்து வருவதன் தீவிரத்தன்மையை எடுத்துக்காட்டுகின்றது.
தெற்கு கரீபியனில் அமெரிக்கா, பெரிய அளவிலான இராணுவக் கட்டமைப்பை செயல்படுத்தி வரும் போதும், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மதுரோவை வெளியேற்ற அழுத்தம் கொடுத்து வரும் நிலையில் இந்நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.

அமெரிக்காவின் அண்மைய நடவடிக்கை, வெனிசுலா, கச்சா எண்ணெயை கொண்டு செல்வதில் ஈடுபட்டுள்ள கப்பல் உரிமையாளர்கள், ஒபரேட்டர்கள் மற்றும் கடல்சார் நிறுவனங்களை விழிப்புடன் வைத்திருக்கச் செய்துள்ளது.
திட்டமிட்டபடி வரும் நாட்களில் வெனிசுலா கடல் எல்லையிலிருந்து பயணம் செய்யலாமா வேண்டாமா என்று பலர் மறுபரிசீலனை செய்து வருவதாக கப்பல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
யாரிந்த பீற்றர் எல்பர்ஸ்... IndiGo தலைமை நிர்வாக அதிகாரியின் சம்பளம், சொத்து மதிப்பு எவ்வளவு News Lankasri