தமிழ் தொழிலதிபரை ஏமாற்றிய முன்னாள் மரண தண்டனை கைதி! தேரருக்கு பிடியாணை..
தமிழ் தொழிலதிபர் ஒருவருக்கு பணம் இல்லாத காசோலையை வழங்கி மோசடி செய்த விகாராதிபதியை கைது செய்யுமாறு கொழும்பு மேலதிக நீதிவான் பிடியாணை உத்தரவொன்றை பிறப்பித்துள்ளார்.
மாளிகாவத்தை ஸ்ரீ போதிராஜராம விகாரையின் விகாராதிபதி உவதென்ன சுமன தேரர் தெமட்டகொட பகுதியில் உள்ள ஒரு தேங்காய் எண்ணெய் நிறுவனத்திடமிருந்து 60 மில்லியன் ரூபா தேங்காய் எண்ணெய்க்காக மோசடியான காசோலைகளை வழங்கிய குற்றச்சாட்டில் நீதிமன்றத்தில் முன்னிலையாகத் தவறியதால் இந்த பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மரண தண்டனை கைதி
கொழும்பு 15 ஐ சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி கலைச்செல்வம் என்ற தொழிலதிபர் 2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளில் குற்றப் புலனாய்வுத் துறைக்கு (CID) செய்த முறைப்பாடுகள் தொடர்பான 4 வழக்குகள் தேரருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

இந்த சம்பவங்கள் தொடர்பாக சந்தேக நபரான பிக்கு காவலில் வைக்கப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வுப் பிரிவு தெரிவித்துள்ளது.
2021 ஜனவரி 3 அன்று ஆயுதங்களை வைத்திருந்த குற்றச்சாட்டில் மரண தண்டனை விதிக்கப்பட்ட இவருக்கு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்கினார்.
மீண்டும் திறக்கப்படும் வான்கதவுகள்.. மட்டக்களப்பு உட்பட பல பகுதிகளில் நிரம்பிவழியும் நீர்த்தேக்கங்கள்
லொறிக்குள் பதுங்கியிருந்த புலம்பெயர் மக்கள்... பிரித்தானிய சாலை ஒன்றில் மடக்கிய பொலிசார் News Lankasri
அறிவுக்கரசியால் ஜனனியின் தொழிலுக்கு ஏற்பட்ட பெரும் துயரம், எப்படி சமாளிக்க போகிறார்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
ஆனந்தியை கொலை செய்ய துளசி செய்த அதிர்ச்சி செயல், தப்பிப்பாரா?... சிங்கப்பெண்ணே சீரியல் பரபரப்பு புரொமோ Cineulagam